பக்கம்:வைணவ உரைவளம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 127 (தானாக-அவன் தானாகவே; நினையானேல்என்னை நினையாதிருந்தாலும்; தன் நினைந்து-அவனையே நினைத்துக்கொண்டு; நைவேற்கு-மனந் தளர்ந்திருக்கும் என்னை; ஓர் மீனாய கொடி நெடுவேள்-மன்மதன்: மெலிவேனோ-இளைத்துப் போவேனோ?) என்ற அளவில் வந்தவாறே நோவு படுவதற்கு முன்பே வந்து உதவாமற் போனாலும் நேர்ந்த நோயைப் போக்கு வதற்காகிலும் வந்தாலாகாதோ?' என்று அருளிச் செய்து மிகவும் தளர்ந்து வருந்தினர் என்பது எல்லோரும் அறிந்த செய்தி. ஆகவே, இத்திருமொழி பகவத் காமுகர்களை நன்கு உருக்கும் என்பது வெள்ளிடைமலை. 47 நிலையாளா! நின்வணங்க வேண்டாயே யாகிலும்,என் முலையாள ஒருநாளுன் அகலத்தால் ஆளாயே, சிலையாளா! மரமெய்த திறலாளா! திருமெய்ய மலையாளா, யோளா வளையரள மாட்டோமேே (நிலை ஆளா-நிலைபெற்ற அடிச்சியாக; நின் வணங்க. உன்னை வணங்கும்படி; வேண்டாயே யாகிலும்-திருவுள்ளம் பற்றாமற் போனா லும்; முலை ஆள-முலைகள் ஆட்சி செய்யும் படி: அகலத்தால்-மார்பினால்; ஆளாய் 16. பெரி,திரு, 3.6:9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/152&oldid=920757" இலிருந்து மீள்விக்கப்பட்டது