பக்கம்:வைணவ உரைவளம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி $39 இப்படியிருக்க உம்மையும் மற்றவர்களைப் போலே இப்படிக் கஷ்டப்படுத்துகின்றானே!" என்றாராம். அதற்கு அவர், நீயாள வளையாள மாட்டோமே" என்றன்றோ கலியன்பாசுரம்; எம்பெருமானுக்கு வாழ்க்கைப்பட்டால் கிலேசப்பட்டுத்தானே இருக்கவேண்டும்' என்றாராம். பிறகு வெளியில் எழுந்தருளின பின் நஞ்சீயர் நம்பிள்ளை யை நோக்கி பார்த்திரா இவருடைய எண்ணத்தை? என்ன பாசுரம் எடுத்துக்காட்டினார்; ' என்று அருளிச் செய்து மகிழ்ந்தனராம். 48 கள்வன்கொல் யானறியேன் கரியானொரு காளைவந்து வள்ளிமருங்குல் என்றன் மடமானினைப் போதவென்று வெள்ளிவ ளைக் கப்பற்றப் பெற்றதாயரை விட்டகன்று அள்ளலம் பூங்கழனி அணி ஆலி புகுவர்கொலோ!' [கள்வன் கொல்- திருடனோ, கரியான்.கருநிறத் தவன்; காளை-இளைஞள், வள்ளிமருங்குல் கொடிபோன்ற இடை, மடமான்- இளமான் போத என்று- வா என்று; அகன்று விட்டொ ழிந்து, அள்ளல்சேறு அம்பூ-அழகிய பூக்கள்: கழனி-வயல்1 பரகால நாயகி திருத்தாயாருடன் கண் உறங்கிக் கொண்டிருந்தபொழுது யாரும் அறியாமல் அவளைத் தன்னுடன் அழைத்துக் கொண்டுபோகத்துணிந்த வயலாளி மணவாளன் திருத்தாயார் சிறிது கண்ணயர்ந்த பொழுது அங்ங்ணமே அவளைக் கொண்டுசென்று விட்டான். உடனே துணுக்கென்று கண் விழித்துக் கொண்ட திருத் தாயார் படுக்கையைத் தடவிப் பார்க்கின்றாள்; மகளை க் 17. பெரி.திரு. 3, 7: 1 வை.-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/154&oldid=920759" இலிருந்து மீள்விக்கப்பட்டது