பக்கம்:வைணவ உரைவளம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 133 அன்றியே ஒருவருக்கொருவர் பித்துக்கொளிகளாய்ச்' சென்று இலங்கைபோன்ற விரோதிகளின் இருப்பிடத்தில் சென்று சேர்வார்களோ? என்று ஐயுற்றுக் கவலைப்பட வேண்டியுள்ளது. இது தோன்றவே அணியாலிபுகுவர் கொலோ?" என்று ஐயம் ஏற்படுமாறு சொல்லப்பெற்றி ருப்பதைக் காண்மின்!” என்று அருளிச் செய்தாராம். இத்திருமொழியின் பாசுரந்தோறும் ஒருதடவைக்கு ஒன்பது தடவையாக அணியாலி புகுவர்கொலே?" என்று ஐயப்பாடு தோன்றவே சொல்லி இருப்பது பொருந்தும். இந்தத் திருமொழியை ஒத்த ஒரு திருப்பதிகம் பெரி யாழ்வார் திருமொழியிலும் உண்டு. தன் மகளுக்கு எம்பெருமான் பக்கலிலுள்ள அன்பு மிகுதியைக் கண்ட திருத்தாயார் இவளுக்கு அவனோடு கலவி உண்டாயிற் றென்று தான் அறிந்தபோதிலும், ஊர்ப்பேச்சு தோன்று வதற்குமுன் இவன்பக்கலில் கொண்டுபோய்ச் சேர்ப்பதே தகுதி என்று உறவினர்கள் சொல்லிக்காட்டியபோதிலும், திருத்தாயார் அவளை அங்ங்ணம் கொண்டுசேர்க்கவில்லை. ஆகவே, எம்பெருமானே ஒர் இரவில் தனியாக வந்து ஒரு படுக்கையில் தாயுடன் படுத்திருந்த இவளை எழுப்பித் திருவாய்ப்பாடிக்குக் கொண்டு செல்கின்றான். பிறகு கண் விழித்த திருத்தாயார் படுக்கையில் மகளைக் காணாமல் பலவகையாகக் கதறுகின்றாள். இதனைக் கூறுவது இத் திருமொழி. திருத்தாயார் பேசுகின்றாள் கல்லதோர் தாமரைப் பொய்கை நாள்மலர் மேற்பணி சோர அல்லியும் தாதும் உதிர்த்திட்டு அழகழிக் தாலொத்த தாலோ? 19. பெரியா திரு5.8.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/158&oldid=920763" இலிருந்து மீள்விக்கப்பட்டது