பக்கம்:வைணவ உரைவளம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 வைணவ உரைவளம் இல்லம் வெறியோ டிற்றதாலோ? என்மகளை எங்கும் காணேன்: மல்லரை அட்டவன் பின்போய் மதுரைப் புறம்புக் காள்கொலோ?" (பொய்கை-குளம்; நாள்மலர்-அப்போது அலந்ந்த பூ: சோர- பெய்ய, அல்லிஉள்ளிதழ்; தாது- மகரந்தம்; வெறிஓடிற்றுவெறிச் சென்றிருந்தது; மல்லர்-சாணுாரன், முஷ்டிகன்) என் பெண்பிள்ளை நீங்கின வீடு தாமரைப் பூக்களி லுள்ள இதழ்கள் உதிரப்பெற்றதனால் தாமரைப் பொய்கை அழகழிந்து தோன்றுவதுபோலுள்ளது; இவள் போனவிடம் இன்னதென்று தெரியவில்லை; ஒருகால் கண்ணனுடன் கூடித் திருவாய்ப் பாடிக்குக் சென்றி ருப்பாளோ?' என்று திருத்தாயார் ஐயமுற்றுக் கூறு கின்றாள். இத் திருமாளிகையில் பெண்பிள்ளை இருந்தது ஒரடி நிலமானாலும் வீடுமுழுவதும் அவளே இருந்ததாகத் தாய்க்குத் தோற்றிக் கிடந்தபடியால் இல்லம் வெறி யோடிற்றதாலோ?’ என்கின்றாள். ஐயங்களெல்லாம் இரண்டு இடங்களைப் பற்றிப் பிறக்குமாதலால் இங்குக் கம்சன் இருப்பிடமான மதுரையிற் புகுந்தாளோ? அன்றி, அதன் அருகிலுள்ள திருவாய்ப்பாடியிற் புகுந்தாளோ? என்று ஐயமுற்றதாகக் கொள்க. ஒருவருக்கொருவர் பண்ணுகின்ற காதல் விளையாட்டுகளினால் இருவரும் மயங்கி மெய் மறந்து கம்சன் நகரில் புகுந்தார்களாகில் தீராத் துன்பம் விளை யுமே! என்ற ஐயந்தான் நெஞ்சினுள் நடமாடுகின்றதாகக் கொள்க. 10. பெரியாழ். திரு. .ே8. 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/159&oldid=920764" இலிருந்து மீள்விக்கப்பட்டது