பக்கம்:வைணவ உரைவளம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 135 49 பண்ணேர் மொழியாய்ச்சிய ரஞ்ச வஞ்சப் பகுவாய் கழுதுக்கு இரங்காது அவள்தன் உண்ணா முலைமற் றவளாவி யோடும் உடனே சுவைத்தா னிடம்,ஓங்கு பைந்தாள் கண்ணார் கரும்பின் கழைதின்று வைகிக் கழுரிேல் மூழ்கிச் செழுர்ேத் தடத்து மண்ணேங் திளமேதிகள் வைகு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே' (மொழி-பேச்சையுடைய; ஆய்ச்சியர்-இடைச் சிகள்; கழுதுக்கு - பேய்ச்சியினிடத்தில்: இரங்காது - நோவு படாமல்; கண்ஆர்கணுக்கள் நிரம்பிய; கழை-கரும்புத் தடிகள்: வைகி-நகரமாட்டாமல் கிடந்து: தடத்துதடாகத்தில்; மேதிகள்-எருமைகள்; திருநாங்கூர்த் திருப்பதிகளுள் ஒன்றாகிய மணிமாடக் கோயில் விஷயமான திருமங்கையாழ்வாரின் திருமொழி யில் ஒரு பாசுரம், கண்ணபிரானுடைய சிறு சேவகங்கள் பல இருந்தாலும், முலை கொடுத்துக் கொல்லவந்த பேய்ச்சிக்குத் தப்பிப் பிழைத்தது மிக அருமையாதலால் இந்த வீரச் செயலில் அதிகமாக ஈடுபட்டிருப்பவர்கள் ஆழ்வார்கள்; ஆகவே இதனை அவர்கள் அடிக்கடி வாய் வெருவுவார்கள். ஐதிகம் : இப்பாசுரத்தைப் பிள்ளை விழுப் பரையரும் ஆப்பானும் கூடி அநுசந்தித்துப் பொருள் நோக்குங்கால்மூன்றாம் அடியில் ஒருமுறை வைகி' என்று வந்திருக்கிறது; நான்காமடியிலும் வைகு' என வந்திருக்கின்றது; இவ்வாறு திரும்பக் கூறுதலுக்குப் பொருளென்? என்று ஐயுற்று 21. பெரி.திரு. 3.8:6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/160&oldid=920766" இலிருந்து மீள்விக்கப்பட்டது