பக்கம்:வைணவ உரைவளம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 வைணவ உரைவளம் மத்தியம அதிகாரிகள் பிரபத்தியை மோட்ச சாதநமாக அபிமானித்து தாழ்ந்த பலனைக் கொள்ளாமல் மோட்ச பலனைக் கொள்வர்; இரத்தினத்தை ஒன்றுக்கும் சாதன மாக்காமல் சொந்த அநுபவத்திற்குக் கொள்ளும் மன்ன னைப்போன்ற உத்தம அதிகாரிகள் பிரபத்தியை ஒன்றுக்கும் சாதனமாகக் கொள்ளாமல் அதனைப் புருஷார்த்தமாக கொண்டு இருப்பர் - இவ்வாறு சம்பிரதாய அர்த்தம் நிர்வகிக்கும் போக்கில் இங்குச் சொன்ன வரலாற்றினால் கீழ்ப்பட்ட அதிகாரிகளின் தன்மை உணர்த்தப்பட்டதாகத் தொனிப்பது காண்க. நான்காம் பத்து 51 வாளை யார்தடங் கண்உமை பங்கனவன் சாபமற் றது.நீங்க மூளை யார் சிரத் தையமுன் அளித்தவெம் முகில்வண்ண னுறைகோயில் பாளை வான்கழு கூடுயர் தெங்கின்வண் பழம்விழ வெருவிப்போய் வாளை பாய்தடம் சூழ்தரு காங்கூர் வண்புரு டோத்தமமே." | வாளை ஆர்-மீன்போன்ற தடகண்-விசால மான கண்; வல்சாபம்-வலியசாபம்; நீங்கதொலையும்படி; மூளை ஆர்-வெறும் எலும் பான; முகில்வண்ணன்-நீலமேக நிறத்தன்; கமுகு-பாக்கு: வன் பழம்-பெரிய காய்கள்: வாளை-மீன்கள்: வெருவி-அஞ்சி; சூழ்ந்தரு -சூழப்பட்டl வண்புருடோத்தம் ரிஷயமான திருப்பாசுரம் இது. 1. பெரி.திரு. 4,8:8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/163&oldid=920769" இலிருந்து மீள்விக்கப்பட்டது