பக்கம்:வைணவ உரைவளம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 வைணவ உரைவளம் கேள்ளம்.சுபடமுள்ள; வஞ்சித்து-ஏமாற்றி: கைப் படுத்து-கைப்பற்றி; பொள்ளைக் கரத்ததுளைக் கையையுடைய: போதகம்-யானை (கசேந்திரன்): துன்பம்-துயரம்: புனிதன்பரம பவித்திரன்; பள்ளம் செறு -தாழ்ந் திருக்கும் கழனி, உகள-விளையாடா நிற்க; பழனம் கழனி-நீர் நிலைகளை யுடையவயல்; பிள்ளை-குஞ்சு.) திருப்புள்ளம் பூதங்குடியிேன் மீது மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருமொழியிலுள்ள ஒரு பாசுரம்: திருமங்கையாழ்வார் அருளிச் செய்தது. வாமனமூர்த்தி யாய் மாவலி பக்கம் சென்று மூவடி மண் இரந்து பெற்று அவனை வஞ்சித்து மூவுலகையும் தன்கீழ்க் கொண்டவ னும், கசேந்திர ஆழ்வான் ஆதிமூலமே!" என்றழைக்க, அரைகுலையத் தலைகுலைய மடுவின்கரைக்கே ஒடி வந்து அதன் துயரைத் தவிர்த்தவனுமான புனிதன் கோயில் கொண்டுள்ள இடம் திருப்புள்ளம் பூதங்குடியாகும்' என் கின்றார். இத் தலத்தின் வயல் வளம் கூறுவன பின்னடிகள். பள்ளச் செறுவில...இரை தேடும்': முற்காலத்தில் ஆலவாயுடையான் என்பானொரு தமிழன் பட்டரிடம் வந்து இப் பாட்டில் ஒரு கேள்வி கேட்டான்; பள்ளிச் செறுவில் கயல் உகள' என்றபோதே அவ் விடத்து வயல்களில் மீன்கள் அளவற்றுக் கிடக்கின்றமை வெளிவந்துவிட்டது; அப்படி யிருக்க, ஈற்றடியில், புள்ளுப் பிள்ளைக்கு இரைதேடும்" என்று எங்ங்னே சொல்லலாம்? மீன் அருமைப்பட்டிருந்தா லன்றோ இரைதேட வேண்டும்? கொள்வார் தேட்டமாம் படி குறையற்றுக் கிடக்கும்போது தேடிப் பிடிப்பதாகச் 2. இராமபிரான் சடாயுவைத் தகனம் செய்து அப் புள்ளன சனைப் பூதங்கள் விளியும் நாளும் போக்கிலா உலகம்’ (கம்ப ஆரணி. சடாயு உயிர்நீத்த 5) புகச் செய்த தலமாதல்பற்றிப் புள்ளம் பூதங்குடி' என்ற திருநாமம் பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/165&oldid=920771" இலிருந்து மீள்விக்கப்பட்டது