பக்கம்:வைணவ உரைவளம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 44 வைணவ உரைவளம் மச்சாவதாரம்) அப் பெருங் கடலினுட்புக்கு அவ் வசுரனைத் தேடிப் பிடித்துக் கொன்று அவன் கவர்ந்து சென்ற வேதங்களை மீட்டுக்கொணர்ந்து, அசாரத்தையும் பிரிக்கும் தன்மையுள்ள அன்னமாய்த் தோன்றி நான்முக னுக்கு உபதேசித்த பெருமான் திருப்புள்ளம் பூதங் குடியி லுள்ளான். இந்த வரலாறு இந்நூல் 64 எண்ணுள்ள பாசுரத்தில் விவரமாகக் குறிப்பிடப்பெற்றுள்ளது. ஆண்டுக் கண்டு கொள்க. 5ア முன்னில வேழுல குணர்வின்றி இருள்மிக உம்பர்கள் தொழுதேத்த அன்ன மாகியன் றொருமறை பயந்தவ னே! எனக் கருள்புரியே மன்னு கேதகை சூதக மென்றிவை வனத்திடைச் சுரும்பினங்கள் தென்ன வென்னவண் டின்னிசை முரல்திரு வெள்ளறை நின்றானே.” 1முன்-முன்பொருகால் ஏழுலகு -ஏழுலகங்களும்; உணவு-அறிவு: இன்றி-கெட்டு; இருள் மிகஇருள் சூழ; உம்பர்கள்-தேவர்கள், தொழுது ஏத்த-வணங்கித் துதிக்க; பயந்தவன்-தேடிக் கொணர்ந்தவன; மன்னு-மாறாதே பூத்திருக் கும்; கேதகை-தாழை; சூதகம்-மாமரம்: வனம் - சோலைகளிடையே, முரல - பாடா நிற்க.1 திருவெள்ளறை மீது மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருமொழியிலுள்ள ஒரு பாசுரம். நான்முகனிட 5. பெரி. திரு. 5.3:8 6. வெள்ளறை-வெண்மையான பாறைகளால் இயன்றமலை அறை-பாறை, இந் நிலையை இன்றும் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/169&oldid=920775" இலிருந்து மீள்விக்கப்பட்டது