பக்கம்:வைணவ உரைவளம்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 149 (வாதம் - வாயுதேவன்; மர்க்கடம்-குரங்கு: ஒழிந்திலை-விட்டிடாதவனாய்; உகந்துஅன்பு வைத்து; ஆதரம்-ஆசை; தகவினுக்கு -உபகாரங்களுக்கு; கோது--குற்றம்; உடனே உண்பன்-உடனிருந்து உண்பேன்; ஒண் பொருள்-சிறந்த பொருள்.1 திருவரங்கம் விஷயமான திருமொழி இது. சக்கர வர்த்தித் திருமகன் சிறிய திருவடியை ஆதரித்த வரலாற்றை முன்னிட்டுக் கொண்டு சரணம் புகுகின்றார் இதில். விலங்கையும் உட்பட அதன் இழிவு பாராதே ஆட்கொண்டு அதன் பக்கல் சிறப்பான கருணை செய்த பொருளை இப் பாசுரத்தில் எடுத்துக்கூறி ஈடுபடுகின்றார். :அநுமனிடத்து வரம்பு கடந்து அருள் செய்ததுபோல அடியேனிடத்தும் என் இழிவு பாராதே பேரருள் புரிய வேண்டும்' என்று வேண்டுகின்றபடி. ஐதிகம் : முன்பெல்லாம் வாழை இலையில் தாமரை இலையிலுள்ளது போலவே இடை நரம்பு இல்லாமலிருந்த தென்றும், இப்பொழுது இராமன் அதுமனைத் தன் எதிரில் அமரச் செய்து தனது இலையில் ஒரு பாதியிலேயே அவன் உண்ணுமாறு அவ்விலை நடுவில் தனது கையால் ஒரு வரை யறை கீறினனாக, அது முதல் சங்கற்பத்தால் அவ்விலையில் இடை நரம்பு ஏற்பட்டதென்றும் கூறுவர். இராமபிரான் ஒக்க உண்ட செய்தி வாஸிஷ்ட ராமாயணத்தில் உள்ளது என்பர். 6O மாக மாநிலம் முழுதும்வந் திறைஞ்சும் மலரடி கண்ட மாமறை யாளன் தோகை மாமயில் அன்னவர் இன்பம் துற்றி லாமையில் 'அத்த:இங் கொழிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/174&oldid=920781" இலிருந்து மீள்விக்கப்பட்டது