பக்கம்:வைணவ உரைவளம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 வைணவ உரைவளம் போகம் ெேயய்திப் பின்னும்கம் மிடைக்கே போது வாய்' என்ற பொன்னருள் எனக்கும் ஆக வேண்டுமென் றடியிணை யடைந்தேன அணிபொழில்தரு வரங்கத்தம் மானே!" fமாகம்-பரமாகாசம் எனப்படும் பரமபதம்: மாநிலம்-விசாலமான பூமி: மலரடிதிருவடித் தாமரை: மாமறையாளன்கோவிந்தசாமி, துற்றிலாமையில்-அநுபவி யாமல்; இங்கு ஒழிந்து-சிலகாலம் இவ்விபூதி யிலே இருந்து; போகம்-இன்பம்; நம் இடைக்கே-நம்மிடம்; போதுவாய்-வந்து சேரக் கடவாய்) திருவரங்கத்தைப்பற்றிய திருமொழியில் உள்ள ஒரு பாசுரம். கோவிந்தசாமியின் கருத்தறிந்து காரியம் செய்ததுபோல அடியேனுக்கும் கருத்தறிந்து காரியம் செய்ய வேணும்' என்று அவனுடைய வரலாற்றை முன்னிட்டுக் கொண்டு சரணம் புகுகின்றார். கோவிந்தசாமி : இப்பெயர் கொண்ட அந்தணன் ஒருவன் இதிகாச புராணங்களைப் பலகாலும் கேட்டு அதனால் கண்ணபிரானுடைய சிறு குறும்புகளையும் குரவைகோத்தல் முதலிய திருவிளையாடல்களையும் நேரில் கண்டு களிக்கக் கருத்துடையவனாய் இதை எம்பெருமான் பக்கல் வேண்டினால் அப்பெருமான் அருள் செய்யக் குறை இல்வல" என்றெண்ணி ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலிற் பிரியாப் புலனைந்தும் நொந்து தாம் வாட வாடத்' தவம் செய்கையில் எம்பெருமான் இவனது நினைவின்படியே கிருஷ்ணாவதாரச் செயல்களை யெல்லாம் அவ் வண்ணமே நேரில் காட்டி இன்னமும் உனக்கு வேண்டுவதென்? என்று கேட்டருளினன். அதற்கு 11. பெரி. திரு. 5.8;5 12. பெரி. திரு. 3.2:1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/175&oldid=920782" இலிருந்து மீள்விக்கப்பட்டது