பக்கம்:வைணவ உரைவளம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 157 உழும்செறுவில் மணிக்கொணர்ந்து கரைமேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள செழும்பொன்னி வளங்கொடுக்கும் சோழன் சேர்ந்த திருகறையூர் மணிமாடம் சேர்மின்களே.' |கயல்-மீன்; நெடுவெள்ளம்-பிரளயப் பெரு வெள்ளம்; அண்டத்து-அண்டபித்தியளவும்; இணையடி-இரண்டு பாதங்கள்: செறுகழனி, மணி-இரத்தினம்) திருநறையூர் மங்களாசாசனத் திருமொழியில் ஒரு பாசுரம். கொழுங்கயலாய்...ஈசன் எந்தை : இதில் மச்சாவதார வரலாறு அநுசந்திக்கப்பெறுகின்றது. அந்த வரலாறு இது: ஒரு பிரமகல்ப முடிவில் பிரம சம்பந்தமான நைமித்திக பிரளயம் உண்டாயிற்று; அப்பொழுது பூமி முதலிய உலகங்கள் கடலால் சூழப்பெற்று மூழ்கும் சமயத்தில் உறக்கம் தெளிந்தெழுந்து அந்த நீரில் படுக்க முயன்ற நான்முகனது முகத்தினின்றும் வெளிக் கிளம்பின நான்கு வேதங்களையும் ஹயக்ரீவன் என்னும் ஓர் தானவன் கவர்ந்து கொண்டு போய்விட்டான்; அப்போது வேதங்கள் தொலைந்தது கண்டு திருமால் ஒரு சிறிய மீன் வடிவு கொண்டார்; அக்காலத்தில் தவத்தின் பெருமையினால் உயிர் வாழ்ந்து கிருதமாலா நதியின் கரையில் திருமாலை நோக்கித்தவம்புரிந்து கொண்டிருந்த சத்திய விரதர் என்னும் ராஜ ரிஷி, அவர் நீர் பருகியே உயிர் வாழ்ந்திருந்தார். அவர் நீர் பருகும்போது அவரது இரண்டு கைகளுக்கிடையில் ஒரு சிறிய மீன் அகப்பட்டுக் கொண்டது. அதனை அவர் நீரில் விட்டார். அப்போது அந்த மீன் ஒ முனிவரே, என்னை இப்படி நீரில் விட்டீரே; என் இனத்தார் என்னை விழுங்கி விடுவார்கள்; என்னை நீர் காப்பாற்றியருள வேண்டும்' என்ன; அவர் அதனைத் தன் கமண்டல நீரில் 7. பெரி. திரு. 6.6:2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/182&oldid=920790" இலிருந்து மீள்விக்கப்பட்டது