பக்கம்:வைணவ உரைவளம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 1.59 பேன்; அப்போது எனது பெருமையை நீர் உணர்வீர்' என்று உரைத்துவிட்டு மறைந்தது. இதனைக் கேட்டிருந்த முனிவர் வியப்புற்று பகவா னாலே குறிக்கப்பட்ட அந்தக் காலத்தை எதிர்பார்த்திருந் தார். ஏழு மேகங்களின் ஆரவாரத்தால் கடல் கிளர்ந் தெழத் தொடங்கிற்று; பகவான் குறித்த தினத்தில் ஒரு பெரிய ஒடம் அக்கடலில் வரக் கண்டார். எல்லாச் செடி கொடி விதைகளையும் அந்தப் படகிலேற்றித் தாமும் அந்தப் படகிலேறினார்; ஏறி, சப்த ரிஷிகளும் தாமும் பகவானைச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், பெரிய கொம் புள்ள மச்ச உருவங் சுொண்ட பகவான் காணப்பட்டார்; ஓர் இலட்சம் யோசனை நீளமும் பதினாயிரம் யோசனை பருமனும் ஒற்றைக் கொம்பும் வெள்ளை நிறமும் எல்லா உலகங்களையும் ஈர்க்கும் உருவமும் வாய்ந்தவராகக் காணப்பட்டார். உடனே சத்திய விரதர் ஒரு பெரிய பாம்பைக் கொண்டு அந்த மச்ச பகவானது கொம்பில் அப்படகைக் கட்டி விட்டார். அந்தப் பெருமான் அதனைச் சுமந்து கொண்டு அண்டகடாகத்தளவும் துள்ளி விளை யாடி, பின்பு அசுரர் கவர்ந்து சென்ற வேதங்களையும் மீட்டுக் கொணர்ந்தருளினர். ஆக, இவ்வண்ணம் பிரளயா பத்தினின்றும் பிரஜைகளைக் காத்தருளியதும் வேதங்களை மீட்டுக் கொணர்ந்ததும் மச்சாவதார வரலாறாகும். 65 ஒளியா வெண்ணெ யுண்டானென் றுரலோ டாய்ச்சி யொண்கயிற்றால் விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி யழுதான் மென்மலர்மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/184&oldid=920792" இலிருந்து மீள்விக்கப்பட்டது