பக்கம்:வைணவ உரைவளம்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 60 வைணவ உரைவளம் களியா வண்டு கள்ளுண்ணக் காமர் தென்றல் அலர்துாற்ற களிர்வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் கின்ற நம்பியே." (ஒளியா-மறைந்து நின்று; ஆய்ச்சி-யசோதை; விளியா-கோபித்து; ஆர்க்க-கட்ட ஆப் புண்டு-கட்டுண்டு; விம்மி-விக்கி; கள்தேன்; அலர்-மலர்; தூற்ற-வீசியிறைக்க) யசோதைப் பிராட்டி தடாக்களில் சேமித்து வைத்த வெண்ணெய் முதலியவற்றைக் களவு வழியாலே கைப்பற்றி அமுது செய்த குற்றத்திற்காகத் தாம்பினால் கட்டுண்டு விக்கியழுத பரம சுலபன் நறையூர் நம்பியாவான். வியாக்கியானத்தில் ஓர் ஐதிகம் : வங்கி புரத்து கம்பி என்பவர் உடையவர் பூரீபாத்தில் பலகாலும் அதுவர்த்தித்து அடியேனுக்கு திருவாராதனப் பிரயோகம் உபதேசிக்க வேணும்' என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். ஆனாலும் உடையவருக்கு உபதேசிக்க அவகாசம் இல்லாமல் போயிற்று. இப்படியிருக்கையில் ஒருநாள் கூரத்தாழ்வானுக்கும் அநுமந்ததாசர் என்ற ஒருவருக்கும் திருவாராதனக் கிரமம் உபதேசிக்க நேர்ந்து உபதேசித்து முடிகிற சமயத்தில் வங்கிபுரத்து நம்பி அங்கே வந்து சேர்ந் தார்; அவரைக் கண்டவுடன் உடையவருடைய திருவுள்ளம் அஞ்சி நடுங்கிற்று; இவர் பலகால் கேட்டுக் கொண் டிருந்தும் இவர்க்கு உபதேசியா தொழிந்தோம்; இன்று இவ்விருவர்க்கு உபதேசிக்கும் போதாவது இவரையும் கூட்டிக் கொண்டு உபதேசித்திருக்கலாம்; அதுவும் செய்யப் பெற்றிலோம்; இவ்விருவகைக் குற்றங்களுக்கும் ஆளா னோமே" என்று அஞ்சி நடுங்கின உடையவர் வங்கிபுரத்து நம்பியை நோக்கி அழகாக ஒரு வார்த்தையை அருளிச் 8. பெரி. திரு, 6.7:4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/185&oldid=920793" இலிருந்து மீள்விக்கப்பட்டது