பக்கம்:வைணவ உரைவளம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி $ 61 செய்தார்; அதாவது- எனக்கு நெடுநாளாக இருந்த ஓர் ஐயம் இன்று தீரப்பெற்றது; ஒளியா வெண்ணெய்யுண்டாய் என்று உரலோடாய்ச்சி ஒண் கயிற்றால், விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மியழுதான்' (பெரி. திரு. 6.7:4) என்றும், எழில்கொள் தாம்புகொண்டடிப்பதற்கு எள்கு நிலையும்... அழுகையும் அஞ்சி அந்நோக்கும் (பெரு. திரு 7:8) என்று ஆழ்வார்கள் அருளிச் செய்கிறார்களே, உண்மையில் இப்படி யிருக்குமோ, சர்வ நியாமகனான எம்பெருமான் நியாம்ய ரானாரிடத்தில் அஞ்சி வருந்தக் கூடுமோ? என்று ஐயம் உண்டாயிருந்தது: இப்போது உம்மிடத்தில் நான் அஞ்சி வருந்தினேனாகையால் அது நடக்கக் கூடியதே என்று துணியப் பெற்றேன். என்றாராம். 6● வள்ளிக் கொழுகன் முதலாய மக்க ளோடு முக்கணான் வெள்.கி யோட, விறல்வாணன் வியந்தோள் வனத்தைத் துணிந்துகந்தான் பள்ளி கமலத் திடைப்பட்ட பகுவாய் அலவன் முகம்நோக்கி கள்ளி யூடும் வயல்சூழ்ந்த கறையூர் கின்ற நம்பியே’

வள்ளிக்கொழுநன் - முருகன்; முக்கணான்சிவன்; வெள்கி-வெட்கி; விறல்வாணன்-பல முடைய பாணாசுரன்: வியன்தோள்;-வனத் தைப் பரம்பின தோள்களாகிற காட்டை, துணித்து-அறுத்து: உகந்தான்- திருவுள்ளம் T9. Quá. B&.7.7, g வை-11
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/186&oldid=920794" இலிருந்து மீள்விக்கப்பட்டது