பக்கம்:வைணவ உரைவளம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t 62 வைணவ உரைவளம் மகிழப் பெற்றான்; கமலம்-தாமரை; பள்ளிபடுக்கை: நள்ளி- பெண்நண்டு; ஊடும்பிணங்கும்) திருநறையூர் மங்களாசாசனத் திருமொழியில் ஒரு பாசுரம், அநிருத்தாழ்வானைச் சிறைப்படுத்தி வைத்த பாணாசுரனின் தோள்களைத் துணித்தும், அவனுடைய காவலராக இருந்த கார்த்திக்கேயன், கரிமுகத்தான் முதலான பரிவாரங்களோடுகூடிய உருத்திரனை முதுகு காட்டி ஒடச் செய்தும் தன்னுடைய பரமபுருஷத்துவத்தை ஒளிர்விடச் செய்து கொண்ட பெருமான் திருநறையூரில் உள்ளான்' என்கின்றார். பள்ளி கமலத்திடை ...கள்ளி யூடும் வயல் சூழ்ந்த : தாமரைப் பூவில் பாயல் கொண்டிருந்த ஆண்நண்டின் முகத்தைப் பார்த்துப் பெண்நண்டு பிணங்கும். இதன் ஆழ் பொருளைப் பராசரபட்டர் அழகாக உரைத்தருள்வாராம். ஒர் ஆம்பல் மலரில் நண்டு தம்பதிகள் இனிது வாழ்கின்றன. ஒருநாள் ஆண் நண்டுக்குக் (அலவன்) கருக்கொண்டுள்ள தன்பேடைக்கு (நள்ளி) இனிய பொருள்களைக் கொண்டு வந்து தரவேண்டுமென்று ஆசை உண்டாயிற்று. தாமரைப் பூவிலிருந்து மகரந்தத்தைத் திரட்டிக் கொணர்ந்து கொடுக்க நினைந்து மெல்ல நகர்ந்து தாமரைப்பூவை அடைந்தது; அப்போது பகலவன் மறையவே அத்தாமரை மலர் மூடிககொள்ள அதனுள்ளே அகப்பட்டுக் கொண்டது. தாமரையை மலர்த்தி எபபடியாவது வெளிக்கிளம்ப முயன் றும் இயலவில்லை. அடுத்த நாள் கதிரவன் தோன்றும் வரையில் காத்திருக்க வேண்டியதாயிற்று. இரவெல்லாம் மலரினுள்புரணடு பொழுது விடிந்ததும் வெளிப் போந்தது. தாதும் சுண்ணமும் உடலில் ஒட்டிய நிலை பில் தன் மனைக்கு விரைந்து வந்து சேர்ந்தது. பகற்பொழுதில் ஆம்பல் மலர் மூடிக்கொள்ளுமாதலால் ஆண் நண்டு அங்கு வந்து சேரும் சமயமும் பெண் நண்டு கிடக்கும் ஆம்பல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/187&oldid=920795" இலிருந்து மீள்விக்கப்பட்டது