பக்கம்:வைணவ உரைவளம்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி | 7 | "என் நெஞ்சினுள்ளே வந்த நின்னைப் போகவொட் டேன்' என்ற ஆழ்வாரை மீறிக்கொண்டு புறப்பட்டுப் போக நினைத்த எம்பெருமான் அதற்குறுப்பான தன் மிடுக்கைக் காட்டினான்; அந்த மிடுக்கில் ஒரு குறையும் இல்லை, நான் அறிவேன் பிரானே!" என்று தாமறிந்த பாசுராமாவதாரத்தை விரித்துரைக்கின்றார். மன்னஞ்சு...துணித்த மைந்தா : இதிலுள்ள இதிகாசம்: ஆயிரம் கைகளை யுடையவன் கார்த்தவீரியார்ஜுனன்; இவன் ஒரு காலத்தில் சேனையுடன் வனத்திற்குச் சென்று வேட்டையாடிப் பரசுராமனது தந்தையான ஜமதக்கினி முனிவரது ஆச்ரமத்தை அடைந்து அவரதுமதியால் அங்கு விருந்துண்டு மகிழ்ந்து மீளுகையில், அவரிடமிருந்த காமதேனு அவருக்குப் பல வளங்களையும் எளிதில் சுரந் தளித்தமை கண்டு, அதனிடம் ஆசைகொண்டு அப் பசுவை அவரதுமதியில்லாமல் வலியக் கவர்ந்துபோக, அதனை யறிந்த அப் பார்க்கவராமரி கடுஞ்சினங்கொண்டு கார்த்த வீரியனுடன் போர் புரிந்து அவனது ஆயிரத் தோள்களை யும் தலையையும் தமது கோடறிப் படையால் கொய்து வெற்றி பெற்றனன் என்பது வரலாறு. 72 தாய்நி னைந்தகன் றேயொக்க வென்னையும் தன்னை யேநினைக் கச்செய்து, தானெனக் காய்கி னைந்தருள் செய்யும் அப்பனை அன்றிவ் வையக முண்டுமிழ்க் திட்ட வாய னை,மக ரக்குழைக் காதனை மைந்த னைமதிள் கோவ லிடைகழி ஆய னை, அமரர்க்கரி யேற்றையென் அன்பனையன்றி யாதறி யேனே." 5. பெரி.திரு. 7.3::

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/196&oldid=920805" இலிருந்து மீள்விக்கப்பட்டது