பக்கம்:வைணவ உரைவளம்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 175 74 நிலையா ளாகவென்னை யுகங்தானை, நிலமகள்தன் முலையாள் வித்தகனை முதுநான்மறை வீதிதோறும் அலையா ரும்கடல்போல் முழங்கழுந்தையில் மன்னிகின்ற கலையார் சொற்பொருளைக் கண்டுகொண்டு களித்தேனே." [நிலை ஆள் ஆக-நிலை நின்ற அடியவனாக: உகந்தானை-உகந்து திருவுள்ளம் பற்றின வனை; ஆள் - ஆளவல்ல; வித்தகனைசமர்த்தனை, கலை ஆர் சொல்பொருளைசாஸ்திரங்களில் நிறைந்துள்ள சொற்களுக்குப் பொருளாயிருப்பவனை) திருவழுந்துர் மங்களாசாசனம் பெற்ற திருமொழியில் ஒரு பாசுரம். எம்பெருமான் என்னை நித்திய அடியவ னாகத் திருவுள்ளம் பற்றினான்' என்கின்றார், கிலமகள்தன் முலையாள் வித்தகனை ; இதற்குப் பெரிய வாச்சான் பிள்ளையின் வியாக்கியான பூரீகுக்தி: :பூரீ பூமிப் பிராட்டியினுடைய திருமுலைத் தடத்துக்கு ஆனைக்குக் குதிரை வைக்க வல்ல ஆச்சரிய பூதனை' என்பது, விளக்கம் : இதில் ஆனைக்குக் குதிரை வைக்க என்பது சதுரங்க ஆட்டத்தின் முறைமைப் பேச்சு. அவ் வாட்டத்தில் அரசன், மந்திரி, யானை, குதிரை இவை போன்ற பெயர்கள் காய்களுக்கு வழங்கும். யானை துர்ப்பலம் என்றும், குதிரை பிரபலம் என்றும் அதிற் இ. பெரி. திரு. 7.6:8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/200&oldid=920810" இலிருந்து மீள்விக்கப்பட்டது