பக்கம்:வைணவ உரைவளம்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 வைணவ உரைவளம் (சேர்ந்து) அநுபவிக்கப் பெறாத பிரிவாற்றாமைக்குப் பரக்கப்பேசுகிற திருமொழி இது. வேளை இழந்தேனே! என்று ஒருகால் சொன்னாற்போலே ஒன்பதின்காற் சொல்லிக் கதறுகின்றாள். பெற்றோர் அல்லது உறவினர் கூட்டாமலேயே தலைவ னுடன் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து, தலைவனுடைய ஒப்புயர்வற்ற வனப்பு முதலியவற்றில் ஈடுபட்டு இருப்பவள் மகள்; குடியின் கட்டுப்பாட்டையும் பாராமல் அவனைக் கிட்டியல்லது உயிர் வாழ்ந்திருக்க மாட்டேன்’ என்னும் பதற்றத்தையுடையவள் இவள். காலக் கழிவினை இவளால் பொறுக்க முடிவதில்லை. திருமந்திரத்தில் பிரணவத்தாலும் நமஸ்ஸாலும் எல்லோருக்கும் சேவியாய் (தலைவனாய்) அறுதியிடப்பெற்றவன் எம்பெருமான். எல்லோருக்கும் புகலிடமாக இருப்பவனும் அவனே. பிரணவத்தாலும் நமஸ்ஸாலும் இவை உணரப்பட்ட பின்பு, நாராயணாய என்ற சொல்லினால் கூறப்பெற் றுள்ள எம்பெருமானுடைய சொரூபம், ரூபம், குணம் , விபூதி முதலியவற்றின்' சேர்க்கையாலுள்ள பெருமையை நினைந்து மகிழ்பவள் இவள். எம்பெருமான் சாத்தியோ பாயமாக இருந்தால் தான் செய்யும் சாதனங்கள் முடிவுற்ற பிறகே, சாத்தியமாகின்ற பேறு கிடைக்கக்கூடும் என்று பொறுத்திருக்கலாம். ஆனால் அவன் சித்தோபாய மாக இருப்பவன். அதனால் அவனைத் தாமதித்து அநுபவிப்பதற்குக் காரணம் இல்லை; அவனே உபாயம்' என்ற கோட்பாட்டையும் மீறித் தான் நினைத்த பேற்றினை உடனே பெற வேண்டும் என்ற பதற்றத்தை 4. சொரூபம்-ஈசுவரனின் திவ்வியாத்தும சொரூபம்; ரூபம்பகவானுடைய திவ்விய மங்கள விக்கிரகம்; குணம்ஆன்ம குணம், விக்கிரக குணம்; ஆன்ம குணங்கள்ஞானம் சக்தி முதலியன; விக்கிரக குணம்-அழகு, மென்மை முதலியன; விபூதி-நியமிக்கப்படும் பொருள் (ஐசுவரியம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/205&oldid=920815" இலிருந்து மீள்விக்கப்பட்டது