பக்கம்:வைணவ உரைவளம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiii உள்ளதைப் பறி கொடுக்கின்றேன். இந்த அநுபவத்தின் விளைவாக எழுந்தது இந் நூல். * யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற உணர்வின் விளைவாக இந்நூல் ஆக்கப்பெற்றது. உரைகளில் கண்ட ஐதிகம், இதிகாசம், சம்வாதம் அடியேனின் உள்ளத்தைக் கவர்ந்தனவாதலின் அவற்றிற்குரிய பாசுரங்களோடு அவற்றைத் தருகின்றேன். இத்தொகுப்பின் முன்னோடி யாகவுள்ள அறிமுகம் நூலைப் புரிந்து கொள்வதற்கு வழியமைக்கும் என்பது அடியேனின் நம்பிக்கை. நூலில் வரும் வைணவப் பெரியார்களைப்பற்றிய குறிப்பும் விளக்கத்திற்குத் துணைபுரிதல் கூடும் என்று கருதி அகர வரிசைப் படுத் தி குறிப்புகளுடன் நூலின் இறுதியில் தந்துள்ளேன். இம்முறையில் மேற்கொண்ட அடியேனின் முயற்சி வைணவ மரபுகளைப் புரிந்து கொள்வதற்குத் துணைபுரியுமானால் அதுவே அடியேன் பெற்ற நற்பேறாக அமையும். ஏழுமலையானின் கருவியாக நின்று நிதி உதவி வரும் திருமலை-திருப்பதி தேவஸ்தானாருக்கும், இதனை அச்சிட்டு உதவிய மூவேந்தர் அச்சகத்தின் உரிமையாளர் முத்து அவர்கட்கும், அழகிய முறையில் ஒவியமும் அச்சுக் கட்டையும் தயாரித்து வண்ண அச்சு முதலியதையும் அமைத்துத் தந்த ஒவிய மன்னர் பி. எஸ். ஆனந்தன் அவரி கடகும் லாமினேஷன் போட்டு உதவிய மாருதி லாமினேஷன் உரிமையாளர் திரு. பார்த்திபன் அவர்கட்கும, இவ்வளவும் ஆன நிலையில் அழகிய முறையில் கட்டமைத்துக் கற்போர் கையில் கவினுறத் தவழச் செய்த சந்தன் அடிமை எஸ். பி. சண்முகம் பிள்ளை அவர் கட்கும் என் இதயம் கலந்த நன்றியைப் புலப்படுத்துகின்றேன். சிறப்புப் பாயிரம் நல்கிய கம்பராமனைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு: முத்தர்களுள் ஒருவரான பன்மொழிப் புலவர் வே. வேங்கட ராஜுலு ரெட்டியார் இவரை திருத்தக்க தேவரும் கம்பநாடரும் இணைந்த மறுபிறவி என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/21&oldid=920820" இலிருந்து மீள்விக்கப்பட்டது