பக்கம்:வைணவ உரைவளம்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 வைணவ உரைவளம் மாலையின் மீதுள்ள ஆசையாலே என் நெஞ்சு என்னை விட்டு அங்குச் சென்றது. அதைப் பெற்றுத் திரும்பி வருதலையும் செய்யவில்லை; அதனைப் பெறுவது அரிது என்று ஆசையை விட்டுவிட்டுத் திரும்பி வந்து விடலாம்: அதையும் செய்யவில்லை. இதுவரையில் எனக்குத் துணை யாக விருந்த என்நெஞ்சும் அகன்றது; உற்ற துணைவனான எம்பெருமானும் என்னை அலட்சியம் செய்துவிட்டான். இப்போது எனக்குந் துணையாவார் ஒருவரும் இல்லை. 'உண்டியே உடையே உகந்தோடும் உலகினருக்கும், உேண்ணும் சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்' என்று இருக்கின்ற எனக்கும் எந்த வித பொருத்தமும் இல்லை. என்றாலும் யாரு டனாவது எதை யாவது பேசிக் கொண்டு பொழுதைப் போக்கித் தொலைப் போம் என்று பார்த்தாலும் ஊராரும் உலகத்தாரும் தாங்கள் விரும்பிய இன்பங்களைக் குறைவரப் பெற்றுக் களித்துக் குறட்டைவிட்டு உறங்குகின்றனர். உலகப் பொருள்களில் எதையேனும் கண்டுகொண்டாகிலும் இந்தப் பிரிவாற்றாமையை ஒருவாறு ஆற்றுவோம் என்று பார்த் தாலும் பகலவன் தேரோடும் போய் மறைந்தான்; இருள் கெளவிக்கொண்டு விட்டதனால் ஒரு பொருளும் கண்ணுக்குப் புலனாவதில்லை. வெளியுலகிலும் ஒருவரும் இலர். நெஞ்சும் குடிபோயிற்று. நாயகனும் வந்து அணை கின்றிலன். காலமோ துயர் நெடுகும் படியான இராக் காலமாக உள்ளது. என்ன செய்து தரிக்கலாமென்று தெரிய வில்லையே' என்கின்றாள் பரகால நாயகி. ஐதிகம் : முற்காலத்தில் எம்பெருமானார் திருவடிகளில் ஆச்ரயித்த பிள்ளையுறங்கா வில்லிதாசர் திருநாட்டுக் கெழுந்தருள, அவரைப் பிரம்ம ரதத்ததில் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு செல்ல, அவருடைய தேவியாரான பொன்னாச்சி பிரிவாற்றாமைப் பாசுரமாகிய இத் திரு மொழியை அநுசந்திக்கத் தொடங்கி, முதற் பாசுரம் அநுசந்தித்து இரண்டாவதான இப் பாசுரம் அதுசந்திக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/211&oldid=920822" இலிருந்து மீள்விக்கப்பட்டது