பக்கம்:வைணவ உரைவளம்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 வைணவ உரைவளம் சூழ்ந்து அம்புமாரி பொழியப் புகுந்ததும், பிறகு அரக்கர் கட்கும் திருமாலுக்கும் மாபெரும் போர் நிகழ்ந்ததும்: அதில் மாலி மரணமடைந்ததும் மற்ற மாலியவான் சுமாலி என்னும் இருவரும் திருமாலுடன் போர் புரிந்து தோற்றதும் உத்தர இராமாயணத்தில் கூறப் பெற்றவை. இந்த மூவருள் ஒருவனான சுமாலியின் மகளான கைகசிக்கு இராவணன் முதலியோர் பிறந்தனர் என்பது அறியத் தக்கது. 84 மலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக அங்கோர் வரைகட்டு இலங்கு சோதி யகரமுதம் எய்து மளவோர் ஆமையாய் விலங்கள் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே' |மலங்கு-மீன் சாதிகள்; விலங்கு-தடுமாறும் படியாக; மறுக-குழம்பும்படியாக; வரைமலை; எய்தும் அளவு-தோன்றும் வரையில்; தடகடல்-பெரிய கடல்: கலங்கல் முந்நீர்கலக்கமுள்ள கடல்) திருக்கண்ணபுர விஷயமான திருமொழியில் ஒரு பாசுரம். கூர்மாவதாரம் செய்த பெருமானைத் திருக் கண்ணபுரத்தில் சேவிக்கப் பெற்றேன்' என்கின்றார். இதிலுள்ள இதிகாசம் : முன் ஒரு காலத்தில் இந்த ஆண்டகோளத்துக்கு அப்பால் உள்ள திருமால் உலகம் $8. பெரி. திரு. &ed;3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/215&oldid=920826" இலிருந்து மீள்விக்கப்பட்டது