பக்கம்:வைணவ உரைவளம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 19 | சென்றாள் ஒரு வித்தியாதர மகள். அவள் திருமகளைப் பாடியதால் ஒருபூமாலை சம்பாவனை செய்யப் பெற்றாள். அதனைத் தன் வீணையில் தரித்துக் கொண்டு பிரம லோகம் வழியாகத் திரும்பி வருகையில் துர்வாச முனிவர் எதிர்ப்பட்டார். விஞ்சை மகள் அம்மாலையை அம்முனிவ னுக்கு அளித்திட்டாள். அதன் பெருமையை உணர்ந்த அம்முனிவன் அதனைத் தன் சிரமேற் கொண்டு தேவலோ கத்துக்கு வருகையில், அங்கு உல்லாசமாகத் தன் வெள்ளை யானையின்மீது பவனி வந்து கொண்டிருந்த இந்திரனைக் கண்டான். அவனுக்கு அந்த மாலையைக் கை நீட்டிக் கொடுக்க, அவன் அதனை அங்குசத்தால் வாங்கி யானை யின் பிடரியின்மீது வைத்தான். அவ்விலங்கு அதனைத் துதிக்கையால் இழுத்துக் கீழெறித்து காலால் மிதித்துத் துவைத்தது. அது கண்ட முனிவன் கடுஞ்சீற்றங் கொண்டு இந்திரனை நோக்கி இவ்வாறு செல்வச் செருக்குற்ற நினது ஐசுவரியங்கள் எல்லாம் கடலில் மறைந்து விடக் கடவன' என்று சபித்தான். உடனே தேவர் செல்வம் யாவும் ஒழிந்தன: ஒழியவே, அசுரர் வந்து பொருது அமரரை வெல்வாராயினர்; பின்பு இந்திரன் தேவர் களோடு திருமாலைச் சரணம் அடைந்து, அப்பிரான் அபய மளித்துக் கட்டளையிட்டபடி, அசுரர்களையும் துணைக் கொண்டு மந்தர மலையை மத்தாக நாட்டி, வாசுகி என்னும் பெரும் பாம்பைக் கயிறாகக் கொண்டு பாற் கடலைக் கடையலாயினர்; அப்பொழுது மத்தாகிய மந்தர கிரி கடலினுள்ளே அழுந்திவிட, தேவர்கள் வேண்டுகோளி னால் திருமால் பெரியதோர் ஆமை வடிவம் எடுத்து அம் மலையின்கீழே சென்று அதனைத் தன் முதுகின்மீது கொண்டு தாங்கி அம்மலை கடலில் அழுந்தி விடாமல் கடைவதற்குப் பயன்படும்படியாக அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தான் என்பது கூர்மாவதார வரலாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/216&oldid=920827" இலிருந்து மீள்விக்கப்பட்டது