பக்கம்:வைணவ உரைவளம்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 வைணவ உரைவளம் 85 மீனோ டாமை கேழல்அரி குறளாய் முன்னும் இராமனாய்த் தானாய், பினனும் இராமனாய்த் தாமோ தரனாய்க் கற்கியும் ஆனான தன்னை, கண்ணபுரத் தடியன் கலியன் ஒலிசெய்த தேனா ரின் சொல் தமிழ்மாலை செப்பப் பாவம் நில்லாவே.' (கேழல்-வராகம்; தான்-இராமன்: தாமோ தரன்-கண்ணன், கற்கி-கல் கி அவதாரம்; செப்ப-ஒலிக்க) கண்ணபுரத்து விஷயமான திருமொழியிலுள்ள ஒரு பாசுரம். பத்து அவதாரங்களையும் அதுசத்திக்கத் தொடங்கிய ஆழ்வார் இந்த நிகமனப் பாசுரத்தில் கல்கி அவதாரத்தை அநுசந்திக்கின்றார். கல்கி அவதாரம் : கண்ணன் தன் சோதிக்கெழுந்தருளி யதும் பூவுலகில் கலியின் ஆட்சி தொடங்கியது. கொடுமைகள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன: நிலமங்கை இவற்றைத் தாங்க மாட்டாமல் இதுகாறும் செய்ததுபோல் திருமாலை ச் சரணம் அடைவாள்; அவரும் தானே மீண்டும் அவதரித்துத் துயர் தீர்ப்பதாகவும் கூறுவார். எதிர்காலத்தில் வடதிசையில் சம்பளம் என்ற சிற்றுாரில் வைதிகோத்தமனான விஷ்ணுயசஸ் என்பவரின் மனைவியாகிய சுமதி என்பாள் கருவிற்புகுந்து பன்னிரண்டு ஆண்டு உறைவார். பிறகு வைகாசி வளர்பிறையில் துவா தசியன்று அவதரிப்பார். வியாசர் முதலிய பெரியோர்கள் ஆக்குழந்தைக் குக் கல்கி என்று பெயரிடுவர். பிறகு கல்கி 1. பெரி. திரு. 3.8:10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/217&oldid=920828" இலிருந்து மீள்விக்கப்பட்டது