பக்கம்:வைணவ உரைவளம்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 96 வைணவ உரைவளம் (5) இரத்தினம் பெற்றுள்ளவனை உலகமெல்லாம் தொடரும். எம்பெருமானைக் கைக் கொண்டவனையும் அப்படியே. (6) இடையில் ஒரு புருஷனைக் கொண்டே இரத்தினம் வாங்கப்படும்; புருஷ காரமின்றி எம்பெருமா னைப் பெற முடியாது. வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து.' (1) இரத்தினத்திற்கு சில சில ஆதாரங்களில் (ஆச்ரயங் களில்) மதிப்பு அதிகப்படும். எம்பெருமானுக்கும் அப்படியே. ஆழ்வார்கள் திருவாக்கில் புகுந்து புறப்பட்ட திருப்பதிகளில் அன்றோ எம்பெருமானுக்கு மதிப்பு அதிகம். (8) இரத்தினம் ஒளியை விட்டு இராது; எம்பெருமா னும் பிராட்டியை விட்டு இரான். (9) இரத்தினத்திற்கு ஒளியால் மகிமை: எம்பெருமா னுக்கும் பிராட்டியால் ஏற்றம். (10) இரத்தினத்திற்கு ஒளியால் ஏற்றமென்றாலும், இரத்தினத்தின் சுதந்திரப் பெருமைக்கு ஒரு குறை இல்லை; எம்பெருமானுக்கும் அப்படியே. (11) இரத்தினம் கடல், மலை முதலிய இடங்களில் உள்ளது. எம்பெருமானும் திருப்பாற் கடல், திருமலை முதலான இடங்களில் உள்ளான். (12) இரத்தினம் எவ்வளவு உயர்ந்ததாயினும் தலைப்பில் முடிந்து ஆளலாம் படி இருக்கும்: எம்பெருமா னும் பரத்துவத்தை மறைத்து செளலப்பியத்தைக் காட்டு கின்றவனனறோ? (13) இரத்தினம் பெற்றவர்கள் இரவும் பகலும் கண்ணுறங்கார் எந்த வேளையில் யார் கொள்ளை கொள் 器多。 திருவாய். 4.6:8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/221&oldid=920833" இலிருந்து மீள்விக்கப்பட்டது