பக்கம்:வைணவ உரைவளம்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 வைணவ உரைவளம் |மலங்க - கலங்கியழியும்படி: சரம் - அம்பு: வல்லாளன் - பெருவீரன்; என்தன்னைஎன்னை: ஏசிடினும்-பழித்தாலும்; பொய்பொய்யுரை! மகள் பாசுரம் : :புல்லாணி சென்று தொழுவோம் என்று ஆசைப்பட்டிருந்த நமக்குத் துன்பப் படுவதே பலனாகத் தேறிற்றே! எஞ்ஞான்றும் துயருற்றிருப்பதே நமது விதி போலும்!' என்று தோழியை நோக்கிக் கூறுகின் றாள் பரகால நாயகி. "புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டிருந்தேனே' எம் பெருமானைத் தவிர மற்றோர்கள் மெய்யுரையே சொல்லு வார்களானாலும் அவற்றால் நமக்கு விளைவதொன்றும் இல்லை; எம்பெருமானது வார்த்தை பொய்யேயானாலும் அது தவிர வேறொன்று நமக்குப் புகல் இல்லை என்கிறாள் என்க. இராமாவதாரத்தில் மெய்யும் கிருஷ்ணாவதாரத் தில் பொய்யுமே நமக்குத் தஞ்சம்' என்று ரஸோக்தியாக பட்டர் அருளிச் செய்வதுண்டு. பொய்யாகிலுமாம் மெய்யா கிலுமாம்; அதில் ஒரு விசாரம் இல்லை. 'எம்பெருமா னுடையது' என்னுமத்தனையே கொண்டு தரித்திருப்பவர் ஆஸ்திகர், 89 அக்கும் புலியின் அதளும் உடையார் அவரொருவர் பக்கம் கிற்க கின்ற பண்பர் ஊர்போலும் தக்க மரததின் தாழ்ச்சினை யேறி, தன்வாயில் கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்னும குறுங்குடியேன் T: பொ.திரு. 9.6;T

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/225&oldid=920837" இலிருந்து மீள்விக்கப்பட்டது