பக்கம்:வைணவ உரைவளம்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 203 னும் கம்சன் பரிவாரத்தில் ஒருவனுமான கழுதை வடிவங் கொண்ட தேனுகாசுரன் சினங் கொண்டு ஓடி வந்து எதிர்த்துப் போர் செய்ய உடனே கண்ணன் அதிலாகவ மாக அதன் பின்னங்காலிரண்டினையும் பற்றி அவ்வசுரக் கழுதையைச் சுழற்றி உயிரிழக்கும்படிப் பனைமரத்தின் மேலெறிந்து அழித்தனன் என்பது வரலாறு. 9. வலம்புரி யாழியனை வரையார்திரள் தோளன்றன்னை புலம்புரி நூலவனைப் பொழில்வேங்கட வேதியனை சிலம்பிய லானுடைய் திருமாலிருஞ் சோலைகின்ற கலந்திகழ் காரணனை கணுகுங்கொலென் கன்னுதலே!" தாய்ப் பாசுரம் திருமாலிருஞ் சோலைமலை விஷய மான பாசுரம். அண்டினவர்கட்கு ஆபத்து வரும்பொழுது தாமதமின்றிக் காத்தற்காக திருவாழி திருச்சங்கை எப் போதும் திருக்கைகளில் ஏந்தியுள்ளவனும், அந்தத் திருப் படைகளின்றியும் காக்கவல்ல தோள் மிடுக்கை யுள்ளவ னும், காக்காதொழியினும் விட வொண்ணாதபடி பூணு நூலையணிந்த அழகு வாய்ந்தவனும், இரட்சிய வர்க்கம் தேடித் திருவேங்கட மலையில் வந்து நிற்பவனும், அது தானும் பரத்துவத்தோடொக்கும் என்று சொல்ல வேண்டும்படி மிக நீசனார்க்கும் முகங்கொடுத்துக்கொண்டு திருமாலிருஞ்சோலையிலே வந்து நிற்கையாகின்ற நீர்மையி லேற்றத்தையுடையவனுமான சீமந் நாராயணனை என் மகள் நண்ணப்பெறுவாளோ?' என்கின்றாள் திருத் தாயார். 4. பெரி. திரு. 9.9:9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/228&oldid=920840" இலிருந்து மீள்விக்கப்பட்டது