பக்கம்:வைணவ உரைவளம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXV போன்றவர். அடியேனின் இளமைப் பருவம் தொட்டே அடியேனின் வளர்ச்சியைக் கண்டு ஆசி கூறி வருபவர். இன்று வைணவ ஒளியில் திளைத்து, தமிழ் ஒளியில் பழுத்து நிற்கும் பாகவத சிரோமணியாகத் திகழ்பவர். 1977-இல் அடியேனை, தன்னிலைமை தானறியாத் தன்மை யாளன்; சாதிவெறி சமயவெறி சற்று மில்லான்; துன்னியால் சைவகுலத் தோன்ற லேனும் தூயதிருக் கச்சிநகர் அண்ணங் கரராம் மன்னியவா சாரியரின் மலர்த்தாள் போற்றி வைணவத்தின் வளமனைத்தும் உணரப் பெற்றோன்; பன்னியதை ஏட்டினிலே பரவச் செய்தான் பலவுரைத்தேன் அவன் திறமைப் பகர்தல் ஆற்றேன்.8 என்று என்னை 'ஏகலைவனாக' இனங்கண்டு வாழ்த்திய பெரியார். இப்பொழுது இந்நூலுக்கு அணிந்துரை நல்கி ஆசி கூறியமைக்கு அடியேனின் மனம் கனிந்த நன்றி என்றும் உரியது. இவர்தம் அணிந்துரையால் இன்னுால் மேலும் சிறப்படைகின்றது என்பது அடியேனின் அதிராத நம்பிக்கை. மகாவித்துவான் கி. வேங்கடசாமி ரெட்டியார் அவர்கள் சற்றேறக் குறைய நாற்பது ஆண்டுகட்குமுன் மயிலையில் வாழ்ந்து வந்த பன்மொழிப் புலவர் உயர்திரு. வே. வேங்கடராஜுலு ரெட்டியார் அவர்கள் இல்லத்தில் அறிமுகம்ஆன நாள் தொட்டு இவர் திருநாடு அலங்கரிக்கும் வரை (22.12-84) அடியேனின் உடன் பிறவாத அண்ணனாக இருந்து வந்தவர். தமிழ்.வைணவக் களஞ்சியம்போல் இருந்து ஒல்லும் வகையெல்லாம் அடியேனுக்கு உதவி வந்தவர். 5. அடியேனின் மணிவிழா மலரில் (1977) வாழ்த்திய பாடல்களில் ஒன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/23&oldid=920842" இலிருந்து மீள்விக்கப்பட்டது