பக்கம்:வைணவ உரைவளம்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 வைணவ உரைவளிம் அவரது திருக்குமாரரான பட்டர் இத்தலத்தில் நெடுநாள் வாழ்ந்த சிறப்பும், எம்பெருமானாரும் கூரத்தாழ்வனும் இத் தலத்திற்கு எழுந்தருளித் திருக்கோட்டியூர் கம்பியிடம் பெரு நிதி பெற்ற சிறப்பும் சிந்தித்தற்குரியவை. 93 எங்க ளெம்மிறை யெம்பிரா னிமையோர்க்கு நாயகன்,ஏத் தடியவர் தங்கள்தம்மனத் துப்பிரி யாதருள் புரிவான், பொங்குதண் ணருவி புதம் செய்யப் பொன்களே சிதறும் இளங்கொளி செங்கமல மலரும் திருக்கோட்டி யூரானே? இறை-சுவாமி, எம்பிரான்-எமக்கு உபகாரகன்; இமையோர்-நித்திய சூரிகள்; ஏத்தும்துதிக்கும்; பொங்கு- மேன்மேலும் கிளர்க் கின்ற; புதம் செய்ய-தாவிப்பாய} திருக்கோட்டியூர் விஷயமான திருமொழியில் ஒரு பாசுரம். எங்களிறை என்றோ எம்மிறை என்று அருளிச் செய்தால் போதுமாயிருக்க, எங்களெம்மிறை அன்பா னேன்? இது கூறியது கூறல் அன்றோ? என்னில்: எங்களுக்கே இறை' என்று உறுதியான தேற்றம் தோற்றச் சொல்லவேண்டுவது ஆழ்வார்க்கு விவட்சிதமாதலால், இரட்டித்துச் சொல்லப்பட்டதென்க. பிறர்க்கும்’ எமக்கும் பொதுவான சுவாமியல்லன் எமக்கே அசாதாரண சுவாமி' என்கிற இதற்குக் கருத்துயாதெனில்: பரவாசு தேவனா யிருக்கும் இருப்பு நித்திய முத்தர்களின் அநுபவத்திற்காக; வியூக நிலை பிரமன் முதலானோருடைய கூக்குரல் 9. பெரி. திரு: 9, 10 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/231&oldid=920844" இலிருந்து மீள்விக்கப்பட்டது