பக்கம்:வைணவ உரைவளம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvi இலச்கியமா? இலக்கணமா? இயல்விஞ் ஞான எழிற்கலையா உளநூலா எதிலும் வல்லான்; கலக்கமிலா தாராய்ச்சி முடிவு காட்டிக் களிப்புறுவோன்; அறிஞரெலாம் கருத வாழ்வோன்; புலக்கண் உற உரைகாண்பான்; நூலும் காண்பான்; போதகா சிரியனுமாய்ப் போக்தான் கண்டீர்; தலக்கணிவன் தனக்குகிகர் தானாய் கின்ற சான்றோன்காண்; சுப்புரெட்டி என்பான் மன்னோ? என்று அடியேனை எடை போட்டு மகிழ்ந்தவர். என்றும் விஷ்ணுகித்தனாக" இருந்து வாழ்ந்தவர். எப்பொழுதும் திருமண் காப்புடன் திகழும் இவரைக் காணும்பொழுது வில்லிப் புத்துார்ப் பெரியாழ்வார் வாழ்ந்த காலத்தில் வாழப் பேறு பெறாத நமக்குப் பூதூரில் வாழ்ந்த இப்பெரியாரைக் காணும்போதெல்லாம் பெரியாழ்வார் நினைவுக்கு வருவதால் இவர் பூதூர்ப் பெரியாழ்வாராகக் காட்சி தருவார். வைணவப் பெருமக்கள் பூதூர் சுவாமிகள் என்றே இவரைப் போற்றிப் புகழ்வர். தமிழிலும் வைணவத்திலும் ஆழங்கால் பட்டு, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை இருமுறை பதிப் பித்து, எல்லையிலாப் புகழ் பெற்ற இப் பெரியாருக்கு இந் நூலை அன்புப் படையாலாக்கி மகிழ்கின்றேன். பரம பதத்தில் முத்தர்களுள் ஒருவராகவுள்ள இப் பெரியாரின் ஆசியால் அடியேன் வைணவ இலக்கியத்திலும் தத்துவத்தி லும் மேலும் மேலும் தெளிவு பெறுவேன் என்பது என் அதிராத நம்பிக்கை. அடியேனின் உள்னத்தில் நிலையாக இருந்து கொண்டு. அடியேனை இயக்கி இத்தகைய தெய்வப் பணியில் ஈடுபடச் செய்து வரும் சீர் ஆர் திருவேங்கட மாமலைமேய, ஆரா அமுதத்தை மனம் மொழி மெய்களால் வாழ்த்தி வணங்கி மகிழ்கின்றேன். 6. அடியேனின் மணிவிழா மலரில் (1977) வாழ்த்திய பாடல்களில் ஒன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/24&oldid=920853" இலிருந்து மீள்விக்கப்பட்டது