பக்கம்:வைணவ உரைவளம்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 2 23. காரகத்தாய்! கார்வானத் துள்ளாய்! கள் வா! காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய், பேராதென் கெஞ்சி னுள்ளாய்! பெருமான் உன் திருவடியே பேணி னேனே!" (நீரகம், ஊரகம், காரகம், கார் வானம்-இவை காஞ்சி உலகளந்த பெருமாள் சந்நிதியில் உள்ள திவ்விய தேசங்கள்; நிலாத்திங்கள் துண்டம் என்ற இது காஞ்சி ஏகாம்பர நாதர் கோயில் திருச்சுற்றில் உள்ளது; கள்வன்இது காஞ்சி காமாட்சியம்மன் திருக்கோயி வினுள் உள்ளது; நெடுவரை-திருவேங்கட மலை; வெஃகா என்பது சொன்னவண்ணம் செய்த பெருமாள் சந்நிதி) இங்கு ஆழ்வார் பல திருப்பதிகளின் திருநாமங்களைச் சொல்லிக் கதறுகின்றார். ாேகத் தாய் : நீரின் இயல்பை உடையவனான எம் பெருமான் எழுந்தருளியிருக்கும் தலமாதல்பற்றி இத் தலத்திற்கு :நீரகம்’ என்று திருநாமமாயிற்று. இவ்விடத்து எம்பெருமானை நீரகத் தாய்!” என விளிக்கின்றார். ர்ேக்கும் எம்பெருமானுக்கும் இயல்பாக உள்ள ஒற்றுமை: (1) நீர் பள்ளத்திலே பாயும்; மேட்டிலிருந்து பாய்வது அருமை. எம்பெருமானும் சாதி முதலியவற்றால் குறைந்த வரிடத்தே எளிதாகச் செல்லுவன்; உயர்ந்தோர் என்று மார்பு நெறித்திருப்போரிடத்தே செல்ல விரும்பான். பாண்டவர்கட்காகத் துரது எழுந்தருளும்போது ஞானத் தால் சிறந்தோம் என்றிருக்கும் வீடுமரையும், குலத்தால் சிறந்தோம் என்றிருக்கும் துரோணரையும், செல்வத்தால் சிறந்தோம் என்றிருக்கும் துரியோதனனையும் ஒரு பொரு 3.திெரு நெடுந் 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/248&oldid=920865" இலிருந்து மீள்விக்கப்பட்டது