பக்கம்:வைணவ உரைவளம்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 229 (3) மொண்ட இடத்திலும் பெய்யும் மேகம், தனக்கு உபதேசித்தவர்களுக்கும் உபதேசிக்குமவன் எம்பெருமான். வசிட்டாதிகளுக்கும் ஞானப் பிரதானம் பண்ணினான் இராமபிரான். சித்திரகூடத்தில் வசிட்டன் பெருமாளிடம் சில தர்மசூக்குமங்கள் கேட்கப் பெற்றானாயிற்று. (4) பெய்யப்பெறாத காலத்திலே வறக்கும் மேகம்: நெஞ்சுலர்ந்து பேசினானன்றோ எம் பெருமானும், திரெளபதிக்கு ஆபத்திலே அருகேயிருந்து உதவப் பெறாத குறைக்காக. (5) இன்ன காலத்திலே மேகம் பெய்யுமென்று அறுதி யிடவல்லார் எவரும் இலர்; பெய்யவேண்டிய காலத்தில் பெய்யாதொழியவும் பெய்வதற்குச் சந்தர்ப்பம் இல்லாத காலத்தில் எண்ணாததாகவும் வந்து பெய்யவும் கடவது மேகம்: எம்பெருமான் படியும் அப்படியே; வந்தாய்போல வாராதாய்! வாராதாய்போல்வருவானே."2"திரெளபதிக்கு ஆபத்திலே வந்து முகங்காட்டா தொழிந்தான்; விரும்புதலை எதிர்பாராமல் தாவியன்றுலகமெல்லாம் தலைவிளாக் கொண்டான்." 22 (6) வனத்திடரை எரியாக வெட்டியாயிற்று. நீ மழை பெய்தாக வேண்டும்'23 என்று வளைப்பிட வொண் ணாது மேகம்; எம்பெருமான் படியும் இங்ங்னமாயிறே." பெண்ணுலாஞ் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண்ணிலா வழியூழித் தவஞ் செய்தார் வெல்கி நிற்ப, விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக் கன்றருளை யீந்தவனிறே"24 (7) ஜலஸ்தல விபாகமின்றியே பெய்யும் மேகம், வேடன் வேடுவிச்சி, பட்சி, குரங்கு, சராசரம், இடைச்சி, 21. திருவாய் 6.10:9 22. திருமாலை.85 28. இரண். திருவத்.10 24. திருமாலை.46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/254&oldid=920878" இலிருந்து மீள்விக்கப்பட்டது