பக்கம்:வைணவ உரைவளம்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 வைணவ உரைவளம் தர்மம் அதுவாதலின். ஒருவனுக்கு வைணவத்வமுண்டு, இல்லையென்னுமிடம் தனக்கே தெரியுங்காண்’ என்று கஞ்சியர் பலகாலும் அருளிச் செய்வர்: அதாவது-பிறர் அநர்த்தம் கண்டால் "ஐயோ!' என்று இரங்குவானாகில், அவன் நமக்கு பகவத் சம்பந்தம் உண்டு" என்று இருக்க அடுக்கும்; இத்தனையும் வேண்டும் பட்டிடுவானுக்கு" என்றிருந்தானாகில் அவன் நமக்கு பகவத் சம்பந்தம் இல்லை என்று இருக்க அடுக்கும் என்பதாம். ዝ ዝ O அடங்கெழில் சம்பத்து அடங்கக் கண்டுஈசன் அடங்கெழில் அஃதென்று அடங்குக உள்ளே.' |அடங்க எழில்-முற்றிலும் அழகியதான; சம்பத்து-விபூதி, கண்டு-பார்த்து; அடங்க. அதெல்லாம்; ஈசன் அஃது-எம்பெருமா னுடையது: எழில்-சம்பத்து; உள்ளே-அந்த விபூதிக்குள்ளே; அடங்குக-செருகிப் போக) உலகிற்கு உபதேசம் செய்யும் திருவாய்மொழியில் இஃது ஒரு பாசுரம். ஆழ்வார் இதில், கட்டடங்க அழகியதான செல்வம் முழுவதையும் பார்த்து, அஃது இறைவனுக்கு அடங்கிய செல்வமாகும் என்று நினைந்து அச்செல்வத் திற்குள் நீயும் அடங்குக' என்கின்றார். பட்டர் : எம்பெருமானுக்கும் நமக்கும் உள்ள உறவை உணர வேண்டும்: அதாவது சம்பந்தஞானமே வேண்டுவது. எங்ங்ணம்? எனில்: ஒரு வணிகன் தன் மனைவி கருவுற்றிருக் 13. திருவாய், 1,2:7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/265&oldid=920901" இலிருந்து மீள்விக்கப்பட்டது