பக்கம்:வைணவ உரைவளம்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 255 ஊருண் கேணி உண்டுறைத் தொக்க பாசி யற்றே பசலை காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பசத்த லானே.” என்ற குறுந்தொகைச் செய்யுளும் உமக்குத் தெரியாது போலும் என்று சொல்லி அவற்றைப் பரக்க விளக்கிச் சமாதானப்படுத்தினாராம். பிரிவாற்றாமையினால் மகளிரின் மேனியில் தோன்றும் நிற வேறுபாடு பசலை நிறம்' எனப்படும். தலைவனை விட்டுப் பிரிந்த காலத்தில் தலைவியின் உடலில் இந்த நிறவேறுபாடு தோன்றுவது வியப்பன்று; ஒர் அமளியில் படுத்துக் கூடியிருக்கும் போதே ஒரு கணகாலம் கை நெகிழ்ந்த அளவில் இந்தப் பசலை நிறம் படர்கின்றதென் றால் பிரிந்த நிலைமையில் கேட்க வேண்டியதில்லை யன்றோ? பட்டரிடத்தில் ஆட்சேபம் செய்த தமிழ்ப் புலவருக்கு இப்போது என்ன சமாதானம் ஆயிற்றென்னில்: இப்பாடல் பிரிவுக் காலத்தில் சொல்லுவதானாலும் கூடியிருந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவத்தையே நினைப்பூட்டுவதாத லால் கேட்டிரங்கி என்ன வேண்டியதில்லை: கண்டிரங்கி என்றே சொல்லதகும் என்பது தெளிவாயிற்று. 118 நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே கல்கத்தான் ஆகாதோ காரணனைக் கணடக்கால் 28. குறுந்-399

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/278&oldid=920929" இலிருந்து மீள்விக்கப்பட்டது