பக்கம்:வைணவ உரைவளம்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 25ሽ நின்று, அவர் பூரீவைஷ்ணவர்களுடன் பரிமாறும் படிக்குத் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்ன லேண்டாவோ?’’ என்று அருளிச் செய்தாராம். TT 9 யேலையே சிறுபூவாய் நெடுமாலார்க் கென்துதாய் நோயெனது நுவலென்ன நுவலாதே யிருந்தொழிந்தாய் சாயலொடு மணிமாமை தளர்ந்தேன்நான் இனியுனது வாயலகில் இன்னடி சில் வைப்பாரை நாடாயே." (அலையே - அல்லவா, நோய்- பிரிவாற்றாமை யாகிய நோய்; துவல்-சொல்; துவலாதேசொல்லாமல்; இருந்தொழிந்தாய் - வாளா இருந்து விட்டாய், சாயல்-ஒளி, மணிமாமை. அழகியநிறம்; தளர்ந்தேன்-இழந்தேன்; இன். மதுரமான அடிசில்-இரை: வைப்பாரைஊட்ட வல்லவர்களை நாடாய்-தேடிக் கொள்) ஆழ்வார் நாயகி நாகணவாய்ப் புள்ளை நோக்கிப் பேசுவது இப்பாசுரம். இதுவும் துரது உரைப்பது. நாகண வாய்ப் பறவையே, அடியரானார்க்கு இரங்கும் பெரும் பித்தரான தலைவர்க்கு என் துரதாகிச் சென்று, என் நோயினைத் தெரிவிப்பாய் என்று கூறினேன்; நீயோ கூறா தொழிந்தாய். அதனால் காரியத்தைக் கெடுத்தது நீயன் றோ? இப்பொழுது யான் சாயலும் அழகிய மாமை நிறமும் 30 திருவாம். 4: 8 வை.-17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/280&oldid=920935" இலிருந்து மீள்விக்கப்பட்டது