பக்கம்:வைணவ உரைவளம்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 259 சாயலொடு மணியாமை தளர்ந்தேன்நான் இனிஉனது வாயலகில் இன்னடி சில் வைப்பாரை நாடாயே என்று கைகூப்பி விண் ணப்பம் செய்ததாக வரலாறு. அடியேன் ஆசாரியன் திருவடி அடையாதின்றேன்; இனி திருவாராதனம் கண்டருளப் பண்ணுவாரைத் தேடிக் கொள்வாய்' என்பது குறிப்பு. ኽ 2O மானேய் நோக்கி மடவாளை மார்பிற் கொண்டாய் மாதவா கூனே சிதைய உண்டையில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா வானார் சோதி மணிவண்ணா மதுசூ தாநீ யருளாய் உன் தேனே மலருங் திருப்பாதம் சேரு மாறு வினையேனே?2 (மானேய் நோக்கி- மானின் பார்வை போன்ற பார்வையினையுடையளாகிய திருமகள்; கோவிந்தன்-சீராமன்; பூமியைக் காப்பவன், கோ-பூமி, வான் -மோட்ச உலகம்; மதுசூதன் மது என்ற அரக்கனைக் கொன்றவன்; இது நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலுள்ள பாசுரம், :மானின் பார்வை போன்ற பார்வையினை யுடையளாகிய திருமகளை மார்பில் தரித்திருப்பதால் மாதவன் என்னும் பெயரினை யுடையவனே! கூனியின் கூன்நிமிர்த்த S AASAASAASAATAAASAAAA 32. இருவரி 1.5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/282&oldid=920938" இலிருந்து மீள்விக்கப்பட்டது