பக்கம்:வைணவ உரைவளம்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 283 தோய்த்துத் தரவேண்டியதாயிற்று. நான் என்ன செய் வேன்? அந்த அமணனே தாமதத்திற்குக்காரணன் ஆவான்' என்று பதிலுறுத்தான். பின்னர் அந்த அமணனைத்தேடிப் பிடித்துக் கொணர்ந்து, நீயன்றோ இத்தனையும் செய் தாய்? நீதான் பழிகொடுக்க வேண்டும்' என்று அரசன் கட்டளையிட, அவன் மெளனியாகையாலே ஒன்றும் விடை கூறாதிருந்தான். மூடஅரசன், உண்மையில் பழிதன்னிடத் திலுள்ளதனால்தான் இவன் வாய் திறந்திலன்; இவனே குற்றவாளி' என்று தீர்மானித்து அவன் தலையை அரியக் கட்டளையிட்டான், இக்கதை அங்யாயதக்ய சரிதத்தி ஆலுள்ளது. அமணன் குற்றம் செய்யாதிருக்கவும் பழி அவன் தலை யிலே ஏறினாப்போல கண்ணபிரான் தீம்பு செய்யாதிருந் தாலும் பிறருடைய தீம்பும் அவன் தலையில் ஏறுமென்று விநோதமாகக் காட்டப் பெற்றது. 鹤空 、 பரிவதில் ஈசனைப் பாடி விரிவது மேவல் உறுவீர் பிரிவகை யின்றிநன் னிர்துய்ப் புரிவது வும்புகை பூவே." (பரிவது இல்-துன்பமற்ற; பாடி-துதி செய்து: விரிவது-சொரூப மலர்ச்சியை: மேவல்பெறவேண்டு மென்கின்ற; பிரிவகை-விலகிப் போதல்; நல்நீர்-நல்ல தீர்த்தம்; தூய்சமர்ப்பிப்பது; புரிவது (மீண்டும்) சமர்ப் பிப்பது; புகை-துரபம்; பூ-மலர்! 34. திருவாய் 1.6:1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/286&oldid=920946" இலிருந்து மீள்விக்கப்பட்டது