பக்கம்:வைணவ உரைவளம்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 வைணவ உரைவளம் இது நம்மாழ்வார் திருவாய்மொழிப் பாசுரம். எம் பெருமான் பரிபூர்ணனன் ஆகையாலே எளிதில் ஆராதிக்கத் தக்கவன் என்கின்றார். அதாவது, குற்றமென்பது சிறிதும் இல்லாத இறைவனை வாயினாற்பாடி ஆன்ம சொரூபத் தின் மலர்ச்சியைப் பெறுதலில் உறுதியை உடையவர்களே! பிரிதற்கு வகை இல்லாமல், நீங்கள் செய்ய வேண்டுவதும் நல்ல நீரைத் தூவிப் புகையைப் புகைத்துப் பூவை அவன் திருவடிகளில் இடுதலே யாகும்' என்கின்றார். "புரிவதுவும் புகை பூவே': இதிலுள்ள ஐதிகம். பராசர பட்டர் இந்தப் பாசுரத்தை உபந்யசிக்கும்போது, இவ் விடத்தில் அகிற்புகை என்றாவது கருமுகைப் பூ என்றாவது சிறப்பித்துச் சொல்லாமையாலே ஏதேனும் ஒரு புகையும் ஏதேனும் ஒரு பூவும் எம்பெருமானுக்கு அமையும்: செதுகை"யிட்டுப் புகைக்கலாம்; கண்ட காலிப் பூவும் சூட்டலாம்' என்றாராம். இதைச் செவிமடுத்த நஞ்சீயர் * கண்டகாலிப் பூவே எம்பெருமானுக்குச் சாத்தலாகாது” என்று சாத்திரம் மறுத்திருக்க, இப்படி அருளிச் செய்ய லாமோ?' என்று வினவ, அதற்குப் பட்டர் அருளிச் செய்த ரஸோக் தி: சாத்திரம் மறுத்தது மெய் தான்; கண்டகாலிப் பூ எம்பெருமானுக்கு ஆகாது என்று மறுத்த படியன்று; அடியார்கள் அப்பூவைப் பறித்தால் கையில் முள் பாயுமே என்று பக்தர்கள் பக்கலில் தயையினால் சாத்திரங் கள் தவிர்த்தனவே யன்றி எம்பெருமானுக்கு ஆகாத பூ எதுவுமில்லை. கண்ணார் துழாயும் கணவலரும் கூவிளையும் முள்ளார் முளரியும் ஆம்பலும்முன் கண்டக்கால்: |கள்.ஆர்-தேன் பொருந்திய, கணவலர்-அலரி மலர்; முள்.ஆர்-முள் பொருந்திய, முளரிதாமரைப் பூ; ஆம்பல்-ஆம்பல் மலர்) 33. செதுகை - தச்சன் செதுக்குகின்ற சிராய்; கூளம்-பதர். 36. பெரி. திரு. 11, 7, 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/287&oldid=920948" இலிருந்து மீள்விக்கப்பட்டது