பக்கம்:வைணவ உரைவளம்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 வைணவ உரைவளம்

  • மிக்கு உயர்ந்த அலைகளையுடைய நீண்ட திருப்பாற் கடலில் அறிதுயில் செய்கின்றவன், அமுதத்தைத் தேவர் கட்குக் கொடுத்த, நிமிர்ந்து விளங்குகின்ற பிரகாசத்தை யுடைய சக்கரத்தைத் தரித்த நெடுமால்; அவன் அமுதத் தைக் காட்டிலும் மிக்க இனிமையுடையவன் ஆவான்' என்கின்றார்.

'அமுதிலும் ஆற்ற இனியன்’ : தேவர்கள் வாசி அறிவார்களாகில் இவனையன்றோ பற்றுதல் வேண்டும்? ஆற்ற இனியன்-மிகவும் இனியன். கம்பி திருவழுதி காடு தாசர்-இத் தேவ சாதி வெறும் மரையோ?38 உப்புச் சாறு3’ கிளருவது எப்போதோ? என்று கவிழ்ந்து பார்த்துக் கிடப்பதே இவன் அழகையும் இனிமையையும் விட்டு!" என் பராம். 123 மாயன்என் நெஞ்சில் உள்ளான், மற்றும் எவர்க்கும் அதுவே: காயமும் சீவனும் தானே; காலும் எரியும் அவனே, சேயன், அணியன், எவர்க்கும் சிந்தைக்கும் கோசரன் அல்லன்: தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளினை யானே." |மாயன்-ஆச்சரியன்; மற்றும் யவர்க்கும்-வேறு யாருக்கேனும்; காயம் - உடம்பு; சீவன். உயிர்: கால்-காற்று; எரி-நெருப்பு: சேயன். 38. மரை-மான் விசேடம் 39. உப்புச் சாறு-அமிருதம் 40. திருவாய். 1.9:6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/289&oldid=920951" இலிருந்து மீள்விக்கப்பட்டது