பக்கம்:வைணவ உரைவளம்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 வைணவ உரைவளம் பெருக்குத் தாங்கமாட்டாமல் தளர்ந்திடுவர் என்று கருதி, சுற்றுப் பக்கத்தில் முதலில் நின்று, அடுத்தடுத்து அருகிலும், ஒட்டியும், ஒக்கலிலும், இதயப் பகுதியிலும், தோளிலும், நாவிலும், கண்ணுள்ளேயும், நெற்றியிலும் இறுதியாக உச்சியிலும் நின்றான். ஆக, இங்ங்னே பொறுக்கப் பொறுக்கச் செய்த செயலை அநுபவித்து ஈடுபடுகின்றார் ஆழ்வார் இத்திருவாய்மொழியில். இங்குள்ள பாசுரத்தில் ஆழ்வார், எம்பெருமான் என் மார்பிலிருந்து தோளிணைக்கு ஏறிவிட்டான்' என்கின் றார். ஆச்சரியமான குணங்களையும் செயல்களையு முடையவன் என் நெஞ்சிலே தங்கியிருக்கின்றான்: இஃது என்ன சேராச் சேர்த்தி? இதனை வேறு எவரேனும் பெற்றாருளரோ? எல்லா உடல்களும் எல்லா உயிர்களும் தானே யாவான்; காற்று நெருப்பு முதலான ஐம்பெரும் பூதங்களும் அவனே யாவான்; தன் முயற்சியால் காண விழைவார்க்கு அப்பாற்பட்டவன்; அவன் அருளால் காண இருப்பார்க்கு அண்மையிலிருப்பவன்; எத்துணைப் பெரிய ஞான முடையார்க்கும் சிந்தையால் நினைப்பதற்கும் ஒண்ணாதவன்; யசோதை முதலானவர்க்கும் பரம் பொருள் என்ற வாசனையு மில்லாத தூய எளிமையினை யுடையவன்; நானல்லேன் என்றிருந்த என் மனத்தை மாற்றினவன்; என்னோடு கலந்தவனான இறைவன் என் தோள்களில் இருக்கின்றவனானான்' என்று பேசுகின்றார் ஆழ்வார் இத்திருப்பாசுரத்தில். இவ்விடத்தில் அரும்பத உரையில் கண்ட ஓர் ஐதிகம் : முற்காலத்தில் பட்டருடைய காலட்சேப கோஷ்டியில் சாத்திர ஞானமுடைய ஓர் அந்தணன் பலகாலும் வந்து போவதுண்டு; அவனைக் கண்டால் பட்டர் ஆதரவு காட்டா மல் சாமானியமாகப் பேசி அனுப்பி விடுவார். சாத்திர ஞானம் முதலியன இல்லாத ஒரு பூரீவைணவனும் வந்து போவதுண்டு; அவரைக் கண்டால் மிகவும் அருள்காட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/291&oldid=920958" இலிருந்து மீள்விக்கப்பட்டது