பக்கம்:வைணவ உரைவளம்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 269 ஆதரித்துக் கொண்டு எழுந்தருளியிருப்பர். இத்த இரண்டு விதப் போக்குகளையும் பலகாலும் கூர்மையாகக் கவனித் தார் ஒருவர். பட்டரை நெருங்கி வந்து சேவித்து, சுவாமி, தேவரீருடைய கோஷ்டிக்குப் பலகாலும் வந்து போகும் சாஸ்திரி மகா வித்துவான்; மிக்க புகழ் படைத்தவர்; அவர் வந்தால் சாதாரண உபசரணை; மற்றொரு சாது பூரீ வைணவர் வரக் கண்டால் மிகவும் அன்புடன் உபசரணை. மதிப்பு தர வேண்டிய இடத்தில் சாதாரண உபசரணையும் கவனியாதிருக்க வேண்டிய இடத்தில் மிக்க உபசரணையும் செய்தருள்வதற்குக் காரணம் அருளிச் செய்வீர் என வேண்டினார். அதற்கு பட்டர், அவர்கள் இருவரும் எப்போதும் போலவே நாளையும் வருவார்கள்; அப்போது நீரும் பார்த்திரும்; வேறுபாட்டை நீரே அறிந்து கொள்வீர்' என்று மறுமொழி பகர்ந்தார். மறுநாள் காலையில் அந்தணன் முதலில் வந்து சேவித் தான். பட்டர் அவனை எப்போதும்போலே வினவியருளி, 'நீர் யாரைத்தான் பரத்துவமாக அறுதியிட்டிருப்பது?” என்று கேட்க, அவன், சில பிரமாணங்கள் நான்முகனைப் பரத்துவமாகப் பேசிகின்றன; சில பிரமாணங்கள் உருத் திரனைப் பேசுகின்றன; சில பிரமாணங்கள் விஷ்ணுவைப் பேசுகின்றன; ஆகவே, பிரமாணங்களெல்லாம் இப்படி மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிக்கின்றன; இந்நிலையில் தத்துவ நிர்ணயம் எப்படிப் பண்ணுவது? அவரவர்களுடைய அபிமானத்தின்படி சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்' என்று விடையளித்தான். அவன் சென்ற பின்னர் அந்த சாது பூரீவைணவர் வந்தார். அவரை நோக்கி, தேவரீர் யாரைத்தான் பரத்துவமென்றிருப்பது?' என்று பட்டர் வினவ, அவரும் சிரீயபதி நாராயணனே பரத்துவமென்றும் எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்றும் பலகாலும் அருளிச் செய்துள்ளிர்கள்; இது தவிர, அடியேன் வேறொன்றும் அறியேன்' என்று விடையிறுத்தார். பட்டர் அவரையும் அனுப்பிவிடுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/292&oldid=920960" இலிருந்து மீள்விக்கப்பட்டது