பக்கம்:வைணவ உரைவளம்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 277 T28 சேர்ந்தார் தீவினை கட் கருநஞ்சைத் திண்மதியை, தீர்ந்தார் தம்மனத்துப் பிரியா தவருயிரை, சேர்ந்தே போகல்கொடாச் சுடரை அரக்கியை மூக் கீர்ந்தா யை, அடியேன் அடைந்தேன் முதல்முன்னமே." (சேர்ந்தார் -பக்தர்கள்; தீவினை-கொடிய பாவம்: திண்மதி-திடமான எண்ணம்; தீர்ந்தார்தனக்கே அற்றுத் தீர்ந்தவர்கள்; அவர் உயிரே-அவர் கட்கு உயிரா யிருப்பவன்; சுடர்-ஒளியுருவாயுள்ளவன்; ஈர்ந்தாயைஅறுத்தவனை: முதன் முன்னம் - அநாதி காலம்.) இப்பாசுரம், அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று ஆழ்வார் உரைத் தலைக் கூறும் திருவாய்மொழியி லுள்ளது. இதில் ஆழ்வார், தன்னை யடைந்தவர்க |ளுடைய தீவினைகட்குக் கொடிய நஞ்சாக இருப்பவனும், அவ் வடியார்கட்குக் தன்னாலும் அசைக்க வொண்ணாத அறிவினைக் கொடுக்குமவனும், தன்னை யொழியச் செல்லாதவர்களுடைய மனத்தினின்றும் பிரியாமல் அங்கே தங்கியிருந்து அவர்களுடைய உயிரைச் சிற்றின்பங்களால் சோர்ந்து போகும்படி விடாத ஒளியுருவ மாணவனும், சூர்ப்பணகையினுடைய மூக்கினை யறுத்தவனும் ஆன உன்னை உனக்கு அடியவனான நான் இவ்வுயிர் உள்ள அன்றே அடைந்தேனே யன்றோ?' என்கின்றார். 7. திருவாய். 2.3:6.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/300&oldid=920979" இலிருந்து மீள்விக்கப்பட்டது