பக்கம்:வைணவ உரைவளம்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 வைணவ உரைவளம் இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தலை எடுத்துக் கூறும் திருவாய்மொழியில் ஒரு பாசுரம் இது. இதில் ஆழ்வார், வெற்றிடம் சிறிதும் இல்லாதபடி என்னுள் கலந்தவனான எந்தை பெருமா னுக்கு அழகிய திருமேனி பகலவனைப் போன்றுள்ளது: திருக்கண்கள் செந்தாமரை மலர்களையொத்துள்ளன; திரு மகளுக்கு இருப்பிடம் திருமார்பு ஆகும்; பிரமனுடைய இடம் திருவுந்தித் தாமரையாகும்; ஒழிந்த மற்றையிடம் சிவன் இருக்கும் இடமாகும்' என்கின்றார். ஐதிகம் : இப்பாசுரத்தை அநுபவிக்கும்போது நஞ்சீயர்மிகவும் ஈடுபட்டு அருளிச் செய்வதொரு வார்த்தை யுண்டு; அதாவது: எம்பெருமானுக்குவிக்ரகமில்லை,விபூதியில்லை’ என்கின்றவர்கள் முன்பே ஆப்த தமரான ஆழ்வார் திரு. டம்புவான்சுடர்' என்னப் பெறுவதே! :ஈசுவரனுக்கு விக்ரக மில்லை, குணமில்லை' என்கிறவர்கள் பண் ணிவைக்காத பாவமில்லை; அவர்களைச் சார்ந்த அதனைக் கேட்கவிராத படி பெருமான் நமக்குச் செய்த உபகாரம்போலே வேறொரு உபகாரமும் இல்லை' என்று அருளிச் செய்வாராம். எம்பெருமான் வந்ததும் ஆழ்வாரோடே தன் திரு மேனியை அனைத்து நின்ற கையாலே அந்த ஊற்றின்பம் கொண்டாடி திருவுடம்பு வான் சுடர்' என்கின்றார். உடனே குளிரக் கடாட்சித்தருளினானாகையாலே செந் தாமரை கண்' என்கின்றார். கண்ணழகைக் கொண்டு பரத்துவம் கொண்டாடி இப்பரம புருடன் எங்கே, நாம் எங்கே என்று நைச்சியம் பாவித்து இறாய்த்த வளவிலே கையாலே பிடித்திழுத்தானாதலால் கை கமலம்' என் கின்றார். இவன் கேட்பாரில்லாதவனாய் நம்மிடம் வந்தா னல்லன்; பிராட்டி முதலானவர்களும் இவனுடைய திரு. மேனியில் ஒவ்வோரிடங்களைப் பற்றிச் சத்தை பெறுபவர்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/305&oldid=920989" இலிருந்து மீள்விக்கப்பட்டது