பக்கம்:வைணவ உரைவளம்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 283. ளாக இருக்கின்றார்கள் என்பதை இரண்டு மூன்றாம் அடிகளில் அருளிச் செய்கின்றார். தாமரைப பூவில் பிறந்த பிராட்டியும் இவன் திருமார்பைப் பற்றிக்கொண்டு அகலகில்லேன் இறையும் (திருவாய் 6.10:10) என்று கிடக் கின்றாள்; பதினானகு உலகமும் படைக்கும் நான்முகனோ திருநாபிக் கமலத்தை விடேன்' என்றிருக்கின்றான்; நீங்கின இடமோ உருத்திரனுடையதாயிரா நின்றது. 13 * ஆணல்லன்; பெண்ணல்லன்; அல்லா அலியுமல்லன்; காணலும் ஆகான்; உளனல்லன ; இல்லையல்லன : பேணுங்கால், பேணும் உருவாகும்; அல்லனுமாம்; கோணை பெரிதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே...' (அல்லா-இவ்விரண்டும் அல்லாத, பேணுங்கால். விரும்பின காலத்து; பேணும்-விரும்பின.1 இத் திருவாய்மொழியில் ஆழ்வார் :: எம்பெருமானைப் பேசித் தலைக் கட்டுவது மிகவும் மிறுக்காக (ஆயாசமாக) உள்ளது' என்கின்றார். ஈட்டிலுள்ள இதிகாசம் : அப் பரம் பொருள் தேவன், அசுரன், விலங்கு இவைகளாக இல்லை, பெண் ணாகவும் இல்லை, அலியாகவும் இல்லை, ஆணாகவும் இல்லை, வேறுபட்ட மற்றைப் பொருளாகவும் இல்லை, குணமாக இல்லை, கிரியையாக இல்லை, சேதநனுமாக இல்லை, அசேதநனுமாக இல்லை," என்று இருக்கு வேதம் ஆரண்யகம் (2:2), பாகவதம் (8.3:24) என்னும் வேத. 14. திருவாய். 2.5:10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/306&oldid=920991" இலிருந்து மீள்விக்கப்பட்டது