பக்கம்:வைணவ உரைவளம்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

之84 வைணவ உரைவளம் புராண வாக்கியங்களை மேற்கோள் காட்டி இப் பாசுரத் தைப் பட்டர் உபந்யசித்துக் கொண்டிருக்கையில் அருகிருந்து கேட்டிருந்த ஒரு தமிழ்ப் புலவர், சுவாமீ. உலகத்திலுள்ள பொருள்கள் ஆண்பால், பெண்பால், அலிப் பால் என்ற மூன்றில் சேர்ந்ததல்லது இருக்க மாட்டாவே, எம்பெருமான் இந்த மூன்று படியிலும் சேர்ந்திலன் என்றால் சூன்யம் என்று சொன்னபடியாகுமே; பிரம்மம் சூன்யம் என்றோ ஆழ்வார் அருளிச் செய்வது?' என்று கேட்க, அதற்கு விடையாகப் பட்டர் பரப்பிரம்மம் சூன்யப் பொருள் என்று சொல்வது ஆழ்வாருக்கு உடன்பா டா கில் சொல் இலக்கணத்துக்குப் (இயலறிவுக்குப்) பொருத்தமாக ஆணல்ல, பெண்ணல்ல, அல்லா அலியு மல்ல' என்று ஆழ்வார் அருளிச் செய்திருப்பர். அங்ங்ன மின்றி, அல்லன் அல்லன் அல்லன்' என்றே (ஆண்பாலுக் குரிய அன்’ விகுதியையிட்டு) அருளிச் செய் திருக்கையாலே எம்பெருமான் சாமான்ய புருஷனல்லன், புருஷோத்தமன்' என்று தெரிவிக்கப் பட்டதாகாதோ?' என்று அருளிச் செய்தார். ஒரே சாதியினுள்ள மற்றைப்பொருள் வேறான சாதியிலுள்ள மற்றைப்பொருள் இவற்றினின்றும் விலக்கிக் காட்டியது உளங்கொள்ளத்தகும். T 32 சிக்கெனச் சிறிதோர் இடமும், புறப்படாத் தன்னுள்ளே உலகு கள் ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற்பின் மிக்க ஞான வெள்ளச்சுடர் விளக்கு ஆய், துளக்கு அற்று, அமுதம் ஆய், எங்கம் பக்கம்நோக்கு அறியான், என் பைந்தாமரைக் கண்ணனே." 15. திருவாய். 2.6:2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/307&oldid=920993" இலிருந்து மீள்விக்கப்பட்டது