பக்கம்:வைணவ உரைவளம்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 வைணவ உரை வளம் குலத்தார்! யாரேனும் வந்தாருண்டோ?" என்று வினவினார். உடனே ஆளவந்தார் அடியேன்" என்று எழுந்தருளி வந்து காண்கின்றார்; தண்டம் சமர்ப்பிக்கின் றார். அடியேன் இங்கு வந்து தேவரீருக்குத் தெரியாதபடி பின்னே நின்றேன். தேவரீர் அறிந்தது எப்படி?’ என்று வினவ, அதற்குக் குருகைக் காவலப்பன் அருளிச்செய்த வார்த்தை-"எம்பெருமானும் நானுமாக அநுபவித்துக் கொண்டிருந்தால் பெரிய பிராட்டியார் திருமுலைத் தடத்தாலே நெருங்கி அணைத்தாலும் அவளது முகத்தைக் கூடப் பாராத சர்வேசுவரன் என் கழுத்தை அமுக்கி நாலு மூன்று தரம் அங்கே எட்டிப் பார்த்தான்; அப்படி அவன் பார்க்கும் போது சொட்டைக் குலத்திலே சிலர் வந்திருக்க வேண்டும் என்றிருந்தேன்' என்றார். ஆழ்வார் பக்கலில் எம்பெருமான் பண்ணி யிருந்த சிறப்பான கடைக் கண் நோக்கு அவர்க்குப் பிறகு, நாதமுனிகளின் திருவமிசத்தில் பெருகத் தொடங்கிற்று என்பது ஈண்டு அறியத்தக்கது. டி. எங்கும்பக்க நோக்கறியான்' என்ற விடத்திற்கு இது மிகப் பொருத்தமான உரையாடல். 133 கேசவன்தமர்' ' என்ற திருவாய்மொழியில் பேசப் படும் பொருள்: எம்பெருமான் யாரிடத்து அருள் செய்தா லும் அவ் வருளை அவர்களிடத்திலேயே நிறுத்தி விடாமல் அவர்களோடு சம்பந்தம் பெற்றவர்கள் பக்கலிலும் பெருகச் செய்யும் இயல்வினன் என்பது இதில் முக்கியமாகப் பேசப் பெறுகின்றது. சர்வேசுவரன் ஆழ்வாரோடே வந்து கலந்த கலவியால் பிறந்த பிரீதி தம்மொருவரளவிலு மன்றிக்கே 16. சொட்டைக் குலம்-நாதமுனிகளுடைய திருவமி சம். ஆளவந்தார் நாதமுனிகளுக்குத் திருப்பேரனார். 17. திருவாய். 2.7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/309&oldid=920997" இலிருந்து மீள்விக்கப்பட்டது