பக்கம்:வைணவ உரைவளம்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 28ገ தம்மோடு பரம்பரையாகச் சம்பந்த முடையாரளவும் பெருகினபடியைக் கண்டு, இஃது இறைவன் என் பக்கல் செய்த பட்சபாத மிகுதியன்றோ?' என்று இனியராய், தம்மை அங்கீகரிக்கைக்கு ஈடான குணங்கள் செயல்கள் முதலியவற்றை அநுசந்தித்து அதற்கு வாசகமான பன்னிரு திருப் பெயர்களாலே அவனைப் பேசி அநுபவிக்கின்றார். சர்வேசுவரன் ஆழ்வாரை அங்கீகரித்தால், சம்பந்தி சம்பந்திகளையும் அங்கீகரிப்பான் என்? எனில்: சர்வேசு வரன் ஒருவனை விஷயீகரித்தால் அது பின்னை அவனள விலே நில்லாதேயன்றோ? இருடிகள் குடியிருப்பை அழித் தான்; மைதிலியைப் பிரித்தான்; நம் உயிர் நிலையிலே நலிந் தாற்போதே பூர் ஜடாயு, மகாராஜரை நலிந்தான்; இவை யெல்லாம் செய்யமாட்டானே இவன் இனி, இவன் pவிக் கின்ற நாளிலே நாம்செய்யும் நன்மை இவன்விலக்காதொழி வதுகாண்’ என்றிருந்தோம்; அஃது அந்நாளில் பெற்றி லோம்: நாம் தேடியிருந்தது முந்துற முன்னம் சிந்திக்கடி பெற்றோம்; இவன் நாம் செய்யும் நன்மைவிலக்காதானான வளவு பிறந்த இன்றும் இழக்க வேண்டுமோ? வேண்டு வன செய்யப் பாரும் : நீர் இறாய்த் திருந்தீராகில், குடல் தொடக்குடையாரிலே ஒருவன் செய்யு மித்தனையன்றோ, நாம் இவனுக்கு வேண்டுவன செய்ய, நீர் கடக்க நில்லீர் என்றார் பெருமாள். இங்கு,பூரீ பீஷ்ணாழ்வான் பக்கலிருந்த அன்பு இராவணனளவும் சென்றது :மகாராஜர்க்குச் சத்துரு என்று வாலியைக் கொன்ற பின்னர், மகாராஜர் கண்ணநீர் பொறுக்கமாட்டாமல் விடப்பட்ட கண்ண நீரை உடையவரானார்' என்கின்றபடியே, தாமும் கண்ணநீர் விழ விட்டார். மங்களகுணமுள்ள மாலா காரரே! உம்முடைய மனமும் எக்காலமும் தர்மத் தில் செல்லப் போகிறது, உம்முடைய வமிசத்தில் நீண்ட ஆயுள் 18. மகாராஜர்-சுக்கிரீவன். 19. பூரீராமா-கிஷ்கிந். 23:24.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/310&oldid=921001" இலிருந்து மீள்விக்கப்பட்டது