பக்கம்:வைணவ உரைவளம்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 2影9

புருஷார்த்த நிர்ணயம் பற்றிய திருவாய்மொழியில் இஃது ஒரு பாசுரம். இதில் ஆழ்வார் என்னுடைய, கருணை படிந்த ஒளியையுடைய மாணிக்கம் போன்ற நிறத்தை யுடைய எந்தையே! எப்பொழுதும் யான் உன்னிடத்தில் கேட்பது இதேயாம்: எது? எனில்: தனது முயற்சி கொண்டு அடைய முடியாத உனது திருவடிகளை யான் அடையும்படி ஞானமாகிய கையைக் கொடு, காலம் நீட்டித்தல் செய் யாதே' என்கின்றார்.

ஞானக் கைதா: என்ற விடத்து ஈடு: :எம்பார்க்கு ஆண்டான் அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது' என்று. இதன் விவரணம் வருமாறு: முதலியாண்டான் ஒரு கால் திருநாராயணபுரத்தில் (கர்நாடக மாநிலத்தில் உள்ளது) எழுந்தருளி யிருக்கையில் அவருடைய சீடரான பூ வைணவர் ஒருவர் கோயிலிலே வந்து எம்பார் சந்நிதி யிலே கைங்கரியம் பண்ணிக் கொண்டிருந்தார். அப்போது ஒருநாள் சில பூரீ வைணவர்களுக்கு எம்பார் திருவிலச்சினை சாதிக்க இருக்கையில் இந்த பூரீ வைணவரும் தமக்குச் சாதிக்கும்படி வேண்டினார்; அப்போது எம்பார் உமக்கு விசேஷ சம்பந்தமுண்டோ?' என்று அவரை வினவ, அவரும் தேவரீருடைய சம்பந்தமே சம்பந்தம்' என்று அவர் விண்ணப்பம் செய்ய, அவ்வளவிலே எம்பார், இவர் முதலியாண்டானுடைய பூரீ பாதத்தவர்' என்றறியாமல் இவருக்குப் பஞ்ச சம்ஸ்காரங்களைப் பண்ணி இவரைக் கொண்டு கைங்கரியங்களும் கொண்டு எழுந்தருளி யிருக்கை யில் ஆண்டானும் திரும்பிக் கோயிலிலே எழுந்தருள, அப்போது அந்த பூரீ .வைணவர் ஆண்டானை வந்து சேவிக்க, ஆண்டானும் முன்புபோலே , இவரைக் கொண்டு வேண்டும் கைங்கரியங்களைக் கொண்டிருக்க, அப்போது எம்பாரும் அறிந்து ஆண்டான் பக்கலிலே எழுந்தருளி, 8கணக்க அபசாரப்பட்டேன்’ என்று அருளிச் செய்தார். இவருடைய திருவுள்ளத்தில் ஊடாடும் கிலேசத்தை வை.-19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/312&oldid=921005" இலிருந்து மீள்விக்கப்பட்டது