பக்கம்:வைணவ உரைவளம்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 வைணவ உரை வளம் தவமே; பிராப்ய ருசி இங்ங்னே பிரார்த்திக்கப் பண்ணு, கிறது' என்று எம்பெருமானுடைய திருமார்பிலே இடை விடாது எழுந்தருளியிருக்கின்ற பிராட்டி வாளா இருக்க லாமே; அப்படியிராமல் அகலகில்லேன் இறையும்’ (திருவாய். 6. 10:10) என்று வாய்க்கொரு முறை சொல்லிக் கொண்டிருக்கின்றாளே, அது ஏன்? அது விஷய ஸ்பாவம் படுத்துகிற பாடு என்னில், இது பிராப்ய ருசி படுத்துகிற: பாடு என்று கொள்ளிர்' என்றும் அருளிச் செய்தார். 136 வலஞ்செய்து வைகல் வலங்கழி யாதே வலஞ்செய்யும் ஆய மாயவன் கோயில் வலஞ்செய்யும் வானோர் மாலிருஞ் சோலை வலஞ்செய்து நாளும் மருவுதல வழக்கே 2' (நலம் செய்து-வலிமை உண்டாக்கிக் கொண்டு; வைகல்-எப்பொழுதும்; கழியாதே-வீணா கப் பாழ்படுத்தாமல் ; வலம்-நன்மை; ஆயபசுக்களையுடைய, ஆ-பசு: மாயவன்திருமகளையுடையவன்; மா-திருமகள்; வலம் செய்யும்-பிரதட்சிணம் செய்யும்; நாளும்நாடோறும்; மருவுதல்-பொருந்தியிருத்தல்; வழக்கு-நியாயம்1 இது நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிப் பாசுரம் *திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக' என்று கூறும் திருவாய் மொழியிலுள்ளது. இதில் ஆழ்வார், வலிமையை வளர்த்து நாடோறும் அவ்வலிமையை மற்றைய விஷயங் களுக்கு வீணாகப் பாழ்படுத்தாமல், நமக்கு நன்மையையே செய்தருளா நின்ற கோபாலனுடைய கோயிலாகி நித்திய சூரிகளும் வந்து வலம் செய்கின்ற திருமாலிருஞ்சோலையை 27. திருவாய், 2.10:8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/315&oldid=921011" இலிருந்து மீள்விக்கப்பட்டது