பக்கம்:வைணவ உரைவளம்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 Ꭻ வைணவ உரைவளம் இந்திரன்; நமன்று-வணங்கி; சமன்கொள்ஒத்ததாக; வீடு-மோட்சம்) திருவேங்கடமுடையானுக்கு அடிமை செய்ய வேண்டும் என்று கூறும் திருவாய்மொழியில் இஃது ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், தேவர்கள் இந்திரனோடும் வந்து சிறந்த பூக்களையும் தண்ணிரையும் விளக்கையும் வாசனைப் புகை யையும் தாங்கிக் கொண்டு வணங்கி எழுகின்ற திருவேங்கட மானது நமக்கு ஒத்ததாகவுள்ள வீடு பேற்றினைத் தரக் கூடிய பெரிய மலையாகும்' என்கின்றார். வானவர் வானவர் கோனொடும் நமன்று எழும் வேங்கடம்' என்பதற்கு நித்திய சூரிகளும் சேனாதிபதியாழ் வானும் பொருந்தி இப்படி ஆராதனைக்கு வேண்டிய பொருள்களைக் கொண்டு வணங்கி எழுகின்ற திருவேங் கடம் என்னவுமாம், இனி, வானவர் வானவர் கோன்' என்பதற்கு தேவர்களும் தேவர்கட்குத் தலைவனான நான் முகனும் என்று பொருள் கூறலுமாம். சுமந்து மாமலர்...கொண்டு : மாமலர் நீர் சுடர் தூபம் இவற்றைச் சுமந்து கொண்டு என்னவுமாம்; அன்றி மாமலர் சுமந்து, நீர் சுடர் தூபம் கொண்டு என்னவுமாம். ஆக, ஒரு கருமுகை மாலையேயாகிலும் இத்தைக் கண்ட ருளக் கடவனே! சாத்தியருளக் கடவனே! நம்மை விசேட கடாட்சம் பண்ணியருளக் கடவனே! என்றிருக்கின்ற இவர்கள் அன்பின் மிகுதியால் கனத்துத் தோன்றுமாதலின் *சுமந்து என்கின்றார். இனி, அன்புடையவன் இட்ட தாகையாலே சர்வேசுவரன் தனக்கு கனத்துத் தோன்று மாதலின் சுமந்து' என்கின்றார் என்னுதல். சுமந்து : அநுகூலன் இட்டது கனத்துத் தோன்றும் என்பதற்கு ஓர் ஐதிகம் காட்டுகின்றார். பூர் ஜகங்காதத்தில் எம்பெருமான் செண்பகப் பூவை உகந்து சாத்திக் கொள்வது வழக்கம். இதனையறிந்த சில அரச குமாரர்கள் செண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/323&oldid=921029" இலிருந்து மீள்விக்கப்பட்டது