பக்கம்:வைணவ உரைவளம்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 303 அவனை முன்னிட்டுக் கொண்டாயிற்றுத் தோன்றுவது. சாதி குணங்களுக்குப் பிரிந்து ஸ்திதியாதல் தோன்றுதலால் இல்லாமை போன்று, பொருள்களாயிருந்தும் அவனை யொழியப் பிரித்து ஸ்திதியாதல் தோன்றுதலாதல் இல்லாமை போன்று, பொருள்களாயிருந்தும் அவனை யொழியப் பிரிந்து ஸ்திதியாதல் தோன்றுதலால் இல்லை யாம்படி இருக்கின்றனவேயன்றோ, பிரமாண பலத்தாலேே ஆயின் நமக்கு விசேஷணாம்சம் ஒழிய விசேஷ்யாம்சம் தோன்றவில்லையே? எனின்; மற்றையோர்க்கு விசேஷ ணாம்சம் தோன்றுகின்றமை போன்று, விசேஷ்யம் தோன் இறுகின்ற படியாயிருக்கும் இவர்களுக்கு. ஆயின், இவர் களுக்கு விசேஷணாம் சத்தால் கருத்து இல்லையோ எனின் விசேஷணாம்சத்தில் தாத்சர்யமின்றிக்கே இருக்குமதுவு மன்றியே, விசேஷண விசேஷ்யங்கள் இரண்டிலும் விசேஷ யமேதோன்றுகிறதாயிற்று விசேஷயப் பிராதாந்யத்தாலே இதுவன்றோ வேதாந்த கேள்வி ஞான முடையார்க்கு இருக்கும்படி. வேதாந்தத்தைக் கேட்டதனால்தான் ஞானம் நிறைவு பெறுகின்றது வேதாந்த சங்கிரகம் என்னா நிறைதன்றோ? இதனால் எல்லாப் பொருள்களும் பிரகாரமாகத்" தான் பிரகாரியாயிருக்கும் படியைச் சொல்லுகிறது, 8. யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிருதிவி சரீரம்-என்ற பிரமாணத்தைத் திருவுள்ளம்பற்றி இவ்வாறு சொல்விப் பெற்றது, 9. விசேஷண அம்சம்-இறைவனுக்குப் பிரகாரமாக இருக்கின்ற உலகத்துப் பொருள்கள். விசேஷ்யம்-பிரகாரி யான இறைவன். 10 பிரகாரம்-அடை 11 பிரகாரி-அடைகொளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/326&oldid=921035" இலிருந்து மீள்விக்கப்பட்டது